சூர்யா ரசிகர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ்... கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kanguva
Kanguva

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது கங்குவா திரைப்படம். இத்திரைப்படத்தை யு. வி. க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது கங்குவா திரைப்படம். இத்திரைப்படத்தை யு. வி. க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

கிட்டதட்ட 2 1/2 வருடமாக இந்த படம் ப்ரடக்ஷன்லேயே இருக்கிறது. படத்தின் அப்டேட் எப்போது வரும், எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது குட்நியூஸ் வந்துள்ளது. அதாவது, கங்குவா படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அதே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் 2 படம் போட்டி போடும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலியை அழைக்கும் ஆஸ்கர் விருது குழு!
Kanguva

இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு வழியாக கங்குவா அப்டேட் வந்தாச்சு என கொண்டாடி வருகின்றனர். இந்த படத்திற்காக நடிகர் சூர்யா பல படங்களை கைவிட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் சூரியா கெரியரில் இந்த படம் முக்கியம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

வாடிவாசல், பாலாவின் வணங்கான் உள்ளிட்ட படங்கள் சூர்யாவிடம் இருந்து சென்றுவிட்ட நிலையில், கங்குவா படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com