மும்பையில் சச்சின், ரெய்னாவுடன் கிரிக்கெட் விளையாடிய சூர்யா!

surya family with Raina
surya family with Raina

கோலிவுட்டை அடுத்து பாலிவுட் சினிமாவில் கால் பதிக்கப் போகும் சூர்யா மும்பையில் நடைபெறும் ISPL லீக் கிரிக்கெட்டில் சென்னை அணி மோதுவதற்கு முன்னர் சச்சின், ரெய்னா போன்றப் பிரபல கிரிக்கெட்டர்களுடன் விளையாடிய போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சூர்யா கடைசியாக நடித்து வெளியானப் படமான 'எதற்கும் துணிந்தவன்' படுதோல்வியைச் சந்தித்ததை அடுத்து சூர்யா அடுத்தடுத்தப் படங்களில் மிகவும் கவனத்துடன் நடிக்க முடிவெடுத்தார். அந்தவகையில் இந்த ஆண்டு வணங்கான், புறநானூறு, வாடிவாசல், கங்குவா ஆகியப் படங்கள் லைனப்பில் உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் 10 மொழிகளில் வெளிவரவுள்ளன.

சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும் படுதோல்வியை சந்தித்ததால்,கங்குவா படத்தை முழு ஈடுபாட்டுடன் இயக்கி வருகிறார் சிவா. அந்தவகையில் சூர்யாவின் சினிமா கெரியரிலேயே அதிக பட்ஜட்டுடனும் 3டி தொழில்நுட்பத்தின் மூலமும் கங்குவா படத்தைப் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் சிவா.

இப்படி தமிழ்ப்படங்கள் லைனப்பில் இருக்க இன்னொருபுறம் சூர்யா பாலிவுட்டில் களமிறங்கப் போகிறார். அதுத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அது ஒரு புராணக் கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த இந்திப் படத்திற்காகத்தான் சூர்யா மும்பையில் மனைவி ஜோதிகாவுடன் சிலக் காலமாக வசித்து வருகிறார்.

அந்தவகையில் ISPL ( Indian Street Premier league ) நேற்று தானேவில் தொடங்கியது. 10 ஓவர் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 6 அணிகள் உள்ளன. மும்பை அணியின் ஓனர் அமிதாப் பச்சன், ஸ்ரீநகர் அணியின் ஓனர் அக்ஷய் குமார், பெங்களூர் அணியின் ஓனர் ரித்திக் ரோஷன், சென்னை அணியின் ஓனர் சூர்யா, ஹைத்ராபாத் அணியின் ஓனர் ராம் சரண், கொல்கத்தா அணியின் ஓனர்கள் சைஃப் அலி கான், கரீனா கபூர் கான் ஆகியோர்.

நேற்றுத் தொடங்கிய இந்த லீகின் முதல் ஆட்டத்தில் ஸ்ரீநகர் மற்றும் மும்பை அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. அந்தவகையில் இன்று மாலை ஐந்து மணிக்குச் சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் மோதல் தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியைப் பார்க்க அமிதாப் பச்சன், ராம் சரண் ஆகியோர் சூர்யாவுடன் கலந்துக்கொண்டனர். நேற்றுத் தொடங்கி, 15ம் தேதிதான் இந்த லீக் முடிவடையவுள்ளது.

இதையும் படியுங்கள்:
100 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வின்.. நெகிழ்ச்சியில் தமிழ்நாடு!
surya family with Raina

5 மணிக்குப் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் சூர்யா, ரெய்னா சச்சின் ஆகியோர் கிரிக்கெட் விளையாடினார்கள். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் யூசப் பதான், முனாஃப் பட்டேல் ஆகியோரும் அவர்களுடன் விளையாடினர். சூர்யா பேட்டிங்கில் களமிறங்கிய போது சச்சின் மற்றும் ரெய்னாவின் பந்துவீச்சை எளிதாக எதிர்க்கொண்டுவிட்டார். ஆனால் முனாஃப் படேல் பந்தில் க்ளீன் போல்டில் அவுட் ஆனார்.

இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு சூர்யா அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரையும் அழைத்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com