நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தில் தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகளுக்கு சூர்யாவின் AI குரல் பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
AI பல துறைகளில் பல வழிகளில் உதவியாக உள்ளது. நமது பல வேலைகளை ஏஐ சுலபமாக்குகிறது. சினிமா துறையிலும் ஏஐ பல வழிகளில் தனது பங்கை ஆற்றுகிறது. ஏஐ மூலம் இறந்தவர்களின் குரலை மீண்டும் கொண்டு வந்து பாடல்களில் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில காலங்களில் ஏஐ அனைத்து துறைகளையும் ஆளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவிடும்.
அந்தவகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் ஏஐ குரல் பயன்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. வெகுகாலமாக அப்போது வரும் இப்போது வரும் என்று கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போய்க் கொண்டேதான் இருக்கின்றது. அந்தவகையில் கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையே சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மேலும் வாடிவாசல் போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன. இதற்கிடையே சூர்யா இப்போது முக்கால்வாசி தனது மனைவியுடன் மும்பையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே சென்னை வந்து செல்கிறாராம். மேலும் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இந்தநிலையில்தான் கங்குவா படத்தில் சூர்யா தமிழில் டப் செய்கிறார். ஆனால் இந்தியா முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் பிற மொழிகளை சூர்யாவின் ஏஐ குரலை பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், “தமிழ் மொழிக்கு சூர்யா டப் செய்கிறார். ஆனால் மற்ற மொழிகளுக்கு AI ஐப் பயன்படுத்துவோம். சமீபத்தில், வேட்டையன் தயாரிப்பாளர்கள் அமிதாப் பச்சனின் குரலுக்கு இதே போன்ற ஒன்றை செய்தனர். சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் படத்தை வெளியிட விரும்புவதால் இது வெற்றி பெறும் என்று நம்புகிறோம்." என்று பேசினார்.