சிங்கப்பெண்: ஆனந்தியை அன்பு வீட்டில் தங்கவைக்கும் மகேஷ்… காத்திருக்கும் பேரதிர்ச்சி!

Singappen serial update
Singappen serial
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண் சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனையடுத்து அடுத்து நடக்கவிருக்கும் விறுவிறுப்பான திருப்பங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சென்ற வாரம் முழுவதும் அவ்வளவாக அன்புவை காணவே இல்லை. அதை சரிகட்டும் விதமாக இந்த வாரம் முழுவதும் அன்பு எபிசோடில் பயணிக்கிறார். காயத்ரியின் பிரச்சனையை சரி செய்து விட்டு வரத்தான் லேட் ஆகிவிட்டது என ஆனந்தி சொல்லாமல் மௌனம் காக்கிறாள்.

இதை வேறு யாரும் சாதகமாக பயன்படுத்திவிட கூடாது என்பதால் வார்டன் ஆனந்தியை மகேஷிடம் ஒப்படைத்து விடுகிறார். உடனே மகேஷ் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், வீட்டில் மகேஷ் அம்மா ஆனந்தி இங்கு தங்கவே கூடாது என்று கூறிவிடுகிறார். ஆகையால் என்ன செய்வது என்று தெரியாமல், மகேஷ் ஆனந்தியை அன்பு வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அன்பு வீட்டில் அம்மா மற்றும் தங்கச்சி ஊருக்கு சென்றுவிட்டனர்.

ஆகையால், அன்பு ஆனந்தியை வீட்டுக்குள் சேர்த்துக்கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆனந்தியை இனி பார்க்கவே கூடாது என்ற முடிவெடுத்த பிறகு எதனால் மகேஷ் சார் மீண்டும் ஆனந்தியை நம்மிடம் கொண்டு வந்து விட வேண்டும். என்னுடைய காதலே ஆனந்தியை என்னிடம் வந்து சேர்த்துவிட்டதா என்று குழப்பம் கொள்கிறார்.

பின் ஆனந்தியிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார். ஆனால், ஆனந்தி சொல்ல தயக்கம் கொள்கிறார். உடனே அன்பு என் கண்களைப் பார்த்து உண்மையை சொல் என்று சொன்னவுடன், ஆனந்தி அனைத்து உண்மையையும் கூறிவிடுகிறார். இதனால் மகேஷ் கோபம் கொள்கிறார். இவ்வளவு நேரம் நான் கேட்கும்போது கூறாமல், அன்பு கேட்டவுடன் கூறுகிறாயே என்று கேட்டு விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் ஹீரோ படத்தில் பாலையாவுடன் ஜோடி சேரும் உலக அழகி!
Singappen serial update

ஆனந்தியை வேறு ஒரு ஹாஸ்டலில் சேர்க்கும் வரை அன்பு விடம் விட்டு செல்கிறான் மகேஷ். இதனையடுத்து காலையில் அன்பு மற்றும் ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதவாது அன்புவின் அம்மா மற்றும் தங்கை வீட்டு வாசலில் வந்து நிற்கின்றனர். இதனால், அன்பு என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறுகிறார். உள்ளே ஆனந்தி தூங்கிக்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து அன்பு எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com