Surya in Bollywood
Surya

பாலிவுட்டில் வில்லனாக களமிறங்கும் சூர்யா... எந்த படத்தில் தெரியுமா?

Published on

கோலிவுட் ஸ்டார் சூர்யா, விரைவில் ஒரு பிரபல பாலிவுட் படத்தின் நான்காம் பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன.

தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் சூர்யா. சூர்யாவின் படம் சமீபக்காலமாக அவ்வளவாக வெளிவரவில்லை. ஆனால், இனி அடுக்கடுக்காக அவரது படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். மேலும் வாடிவாசல், புறநானூறு போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன. இதற்கிடையே சூர்யா இப்போது முக்கால்வாசி தனது மனைவியுடன் மும்பையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அவ்வப்போது மட்டுமே சென்னை வந்து செல்கிறாராம்.

சமீபத்தில் இவர் சகல வசதிகளுடன் கூடிய ஒரு விமானம் வாங்கினார் என்ற செய்திகள் வந்தன.

இதனையடுத்து தற்போது ஒரு பிரபல படத்தின் 4ம் பாகத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வந்துள்ளன.

ஆம்! பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ஹிரித்திக் ரோஷன், ரிமி சென், உதய் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் 'தூம்'. இதன் வெற்றியைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தன.

இதையும் படியுங்கள்:
பாக்கியலட்சுமி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி… கோபி பேசியதைக் கேட்டு ஆடிப்போன குடும்பம்!
Surya in Bollywood

கடைசியாக 2013ம் ஆண்டு தூம் 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதிலும், அபிஷேக் பச்சன், அமீர்கான், உதய் சோப்ரா, கத்ரினா கைஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இதனையடுத்து தற்போது இதன் 4ம் பாகத்தை எடுக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கோலிவுட் நடிகர் சூர்யாவிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

இதில் மட்டும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார், பாலிவுட்டில் சூர்யாவின் இரண்டாவது படமாக இது அமையும். ஏனெனில், சூரரைப் போற்று ரீமேக்கான சர்பிரா படத்தில் சூர்யா கேமியோ ரோல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com