சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்... கங்குவா பட மாஸ் அப்டேட் இதோ!

Kanguva
Kanguva

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சூர்யா நடிக்கும் கங்குவா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு 'Fire Song' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாகவும், மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கங்குவா' திரைப்படம்.

இத்திரைப்படத்தை யு.வி.க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. கிட்டதட்ட 2 1/2 வருடமாக இந்த படம் ப்ரோடக்ஷனிலேயே இருக்கிறது. படத்தின் அப்டேட் எப்போது வரும், எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது குட்நியூஸ் வந்துள்ளது. அதாவது, கங்குவா படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் அதே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் 2 படம் போட்டி போடும் என தெரிகிறது.

இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு வழியாக கங்குவா அப்டேட் வந்தாச்சு என கொண்டாடி வருகின்றனர். மேலும் தற்போது சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட் வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இயக்குநர் மாரி செல்வராஜின் ஆசிரியையாக களம் இறங்கிய நிகிலா விமல்!
Kanguva

இந்நிலையில் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Fire Song என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இது சூர்யாவின் அறிமுக பாடலாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நடிகர்கள் பிறந்தநாளுக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு படத்தின் அப்டேட் வெளியாகும். அப்படிதான் சூர்யா ரசிகர்களுக்கு இந்த பாடல் ஒரு கொண்டாட்ட வைபாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளதாம். முதல் பாகம் இந்த ஆண்டு வெளிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டு துவங்கி, படம் 2027லில் வெளிவரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com