சூரரை போற்று இந்தி ரீமேக்.. டைட்டில், ரிலீஸ் தேதி இதுதான்!

சூரரை போற்று
சூரரை போற்று
Updated on

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக் டைட்டில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறின. இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகராக வலம் வந்த சூர்யா தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது தமிழில் தன்னுடைய தம்பி நடிப்பில் உருவாகிவரும் கார்த்தி 27 படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வருகிறார். முன்னதாக தன்னுடைய நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது இதன் பெயர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். சூரரைப் போற்றின் இந்தி ரீமேக்கிற்கு சர்பிரா என்று பெயர் வைத்துள்ளனர். வரும் ஜுலை 12 படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். தமிழில் வெளியான சூரரை போற்று படம் பலரது வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்த படம். இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com