33 வருடங்களை நிறைவு செய்த தமிழ் பிளாக்பஸ்டர் படம் 'சின்னத்தம்பி'!

Chinna Thambi Movie
Chinna Thambi Movie

இன்றும் கூட குழந்தைகளைத் துங்க வைக்கவும் கொஞ்சவும் பலரும் முணுமுணுக்கும் பாடலாக உள்ளது "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே...". காதல் ஜோடிகளுக்கு ஏற்ற சிச்சுவேசன் பாடல்களுடன் நம்மால் என்றும் மறக்க முடியாத காதல் காவியம் தான் பிரபு குஷ்பூ ஜோடியாக நடித்த திரைப்படம் 'சின்னத்தம்பி'. 1991 ஏப்ரல் 12 ம் தேதி வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று குஷ்பு மற்றும் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என அறிவோம்.

பி வாசு இயக்கத்தில் இளையராஜாவின் அற்புதமான இசையில் சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "தூளியிலே ஆட வந்த" "போவோமா ஊர்கோலம்"" குயில புடிச்சு கூண்டில் அடைச்சு" "நீ எங்கே என் அன்பே" "அரச்ச சந்தனம்" "அட உச்சம் தல"  போன்ற பாடல்கள் மக்களின் பெரும் வரவேற்பு டன் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.

பிரபு படிக்காத கிராமத்து எளிய அப்பாவியாகவும் , குஷ்பு தங்க கூண்டில் அடைக்கப்பட்ட பெரும் பணக்கார வீட்டுப் பெண்ணாகவும் (காதலர்களாக) அருமையாக நடித்து நம் மனதில் இடம் பிடித்தனர். நடிகர்  பிரபுவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களில் ஒன்றான இந்த படம்  கன்னடத்தில் "ராமச்சாரி" என்றும் தெலுங்கில் "சாந்தி" என்றும் மற்றும் இந்தியில் "அனாரி" என்னும் ரீமேக் செய்யப்பட்டது . மேலும்  ஒன்பது திரை அரங்குகளில் 356 நாட்கள் ஓடியதும் மற்றும் 47 திரைகளில் 100 நாட்கள் ஓடியதும்  குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தைத் தொடர்ந்து இதன் ஹீரோ ஹீரோயின் பிரபு குஷ்பு ஜோடி 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஜோடியாக விரும்பப்பட்டனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் குஷ்பு நெகிழ்ச்சி யுடன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதில் "நேரம் பறக்கிறது என்பார்கள். அது உண்மைதான். சின்னத்தம்பி படம் தமிழக மக்களைப் புயலாக தாக்கி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை. இந்த படம் எங்களின் வாழ்க்கையை முற்றிலும் ஆக மாற்றி அமைத்தது. இன்றுவரை எல்லோரும் என் மீது செலுத்தும் அன்பும் பாசமும் மரியாதையும் நினைத்துப் பார்க்க முடியாதது.

இதையும் படியுங்கள்:
நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட்?
Chinna Thambi Movie

இதற்காக ஒவ்வொருவருக்கும் எப்போதும் அன்புடன் இருப்பேன். இயக்குனர் பி.வாசு, சக நடிகர் பிரபுவின் ஆகியோர் எனக்கு சிறப்பு வாய்ந்தவர்கள் . இளையராஜாவுக்கு நன்றி. சின்னத்தம்பி 33 வருடங்கள் நிறைவு உங்கள் அன்புக்கு நன்றி, தலைவணங்குகிறேன்"  என்று கூறியுள்ளார்.

இந்தப்படம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், திரைப்பட ரசிகர்கள் சங்க விருதுகள்,தென் பிலிம்பேர் விருதுகள்,  தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் என நிறைய பாராட்டுகளைப் பெற்றது. மேலும் இதன் இயக்குனரான பி.வாசுவிற்கு நவரச இயக்குனர் எனும் விருதையும் மதுரையின் அமுதசுரபி கலாமன்றம் வழங்கி கௌரவித்தது.

சிறந்த கதையம்சத்துடன் காதுக்கினிய பாடல்களுடன்  தத்ரூப நடிப்பும் இருந்தால் என்றும் மக்களிடம் வரவேற்பு பெறும் என்பதற்கு சின்ன தம்பி ஒரு சான்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com