தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கு வடபழனியில் பிரம்மாண்டம்: 50 ஆண்டு ஏக்கத்திற்கு தீர்வு!

வடபழனியில் உருவாகும் அதிநவீன இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடம்; நிதி திரட்ட 'Music of millennium' இசை நிகழ்ச்சி!
இசையமைப்பாளர்கள் கட்டிடம்
இசையமைப்பாளர்கள் கட்டிடம்
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் லட்சம், கோடி என்று சம்பாதிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவிற்கு நடிகர்களுக்கு என்று தனியான நடிகர் சங்க கட்டிடம் என்பது இதுவரை இல்லாமல் இருந்தது. 50 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் நடிகர் சங்கத்திற்கு என்று தனியான கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

1980கள் வரை தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் தான் நடைபெற்றது. தென்னிந்திய சினிமாவின் தலைமை என்பதே தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையாக இருந்தது என்பது கடந்த கால வரலாறு. சிவாஜி கணேசன், கமலஹாசன் போன்ற உலக புகழ் பெற்ற தமிழ் சினிமா நடிகர்களை போலவே லண்டன் சிம்பொனிக்கு இசை அமைத்த இளையராஜா, மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மானும் தமிழ் சினிமாவின் உலக இசை அடையாளங்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருந்தும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கு என்று சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட ஒரு சரியான கட்டிடம் இல்லை. இதை இப்போதுதான் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதை மாற்ற விரைவில் பல கோடி செலவு செய்து சென்னை வடபழனியில் இசையமைப்பாளர்களுக்கு என்று ஒரு மிகப்பெரிய கட்டிடம் கட்ட இருக்கிறார்கள்.

இந்த கட்டிடத்தில் அனைத்து வித இசைக்கருவிகளும் லைவாக இசையமைப்பதற்கான ஸ்டுடியோ வசதிகளிலும் நவநாகரீக இசைக்கருவிகளும் இடம் பெற்றிருக்கும். இதற்காக நிதி திரட்டும் பொருட்டு மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை மிக விரைவில் நடத்த உள்ளார்கள். இதைப் பற்றிய தகவல்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று சினிமா இசையமைப்பாளர் சங்கத்தில் உள்ள ஒரு அங்கமான மாயா பஜார் என்ற அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாசர், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் விவேகா, சினேகன், கங்கை அமரன் என பலர் கலந்து கொண்டார்கள். 

இசைக் கலைஞர்களின் கட்டிடம் எதற்காக தேவை என்பதை ஒவ்வொருத்தரும் புரிய வைத்தார்கள். நாசர் பேசும்போது "நான் பல படங்களில் நடித்து விட்டேன். நடிகன் என்பது என்னுடைய அடையாளம் இருந்தாலும் இன்று வரை தமிழர்கள் வாழும் எந்த பகுதிக்கு நான் சென்றாலும் "சார் நீங்க அவதாரம் படத்தில் நடிச்ச தென்றல் வந்து தீண்டும் போது பாடல் எங்களுக்கு சோகமாக இருக்கும் போதெல்லாம் கேட்போம். இளையராஜா சார் இசைல நீங்க நடிச்ச விதம் ரொம்ப நல்லா இருந்தது" என்று சொல்லி பாராட்டுவார்கள்.

நடிப்புக்காக எனக்கு கிடைத்த பாராட்டுகளை விட இந்தப் பாடலைநான் எடுத்த விதத்திற்காகவும் இளையராஜா இசையமைத்த இசைக்காகவும் இன்று வரை எனக்கு பாராட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று இசை என்பது இயந்திரத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இது லைவாகவும் கடந்த காலங்களில் ராஜா சாரால் இசையமைக்கப்பட்டு இருக்கிறது.

இசையமைப்பாளர்கள் கட்டிடம்
இசையமைப்பாளர்கள் கட்டிடம்

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இப்பொழுது தான் நமக்கென்று ஒரு தனியான நடிகர் சங்க கட்டடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல விரைவில் சென்னையில் இசையமைப்பாளர்களுக்கும் கட்டிடம் உருவாகும்" என்றார்.

தேவா சற்று வருத்தத்துடன் பேசுகிறார்.” இங்கே நிகழ்ச்சியில் பல இசைக் கலைஞர்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின் புகைப்படம் இல்லாமல் இருப்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது. இசையமைப்பாளர் சங்கம் என்பதற்கு உருவாக காரணமாக இருந்தவர் மெல்லிசை மன்னர் அவர்கள். இன்று பல இசை அமைப்பாளர்கள் காரில் வசதியாக செல்வதற்கு காரணம் எம் எஸ் வி அவர்கள் தந்த வழிகாட்டுதலும் ஆசிர்வாதம் தான். இதை சொல்வதற்கு எனக்கு எந்த வெட்கமும் தயக்கமும் இல்லை. இனி எதிர்காலத்தில் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் புகைப்படமும் விரைவில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த கட்டிடம் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் இசையை சினிமா தாண்டி இந்த உலகத்திற்கு பெரிய அளவில் பறைசாற்றும் என்று நம்புகிறேன்" என்றார். கங்கை அமரன் அவர்கள் பேசும்போது, "நான் பல படங்களுக்கு இசையமைத்து விட்டேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி விட்டேன். எனது அண்ணன் ராஜாவை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இத்தனை இருந்தும் இசையமைப்பாளர்கள் தங்கள் பரிசோதனைகளை செய்து பார்க்க ஒரு வசதியான இடமில்லையே என்ற ஏக்கம் எனக்கும் என் அண்ணனுக்கும் இருந்தது அதை போக்குவதற்கான ஒரு முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். 

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
இசையமைப்பாளர்கள் கட்டிடம்

இசையமைப்பாளர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு 'Music of millennium' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த பெயருக்கு ஏற்றால் போல் மிகப் பெரிய ஒரு நிகழ்ச்சி இந்த கட்டிடம் கட்டுவதற்காக நடத்தப்படும். இந்த நூற்றாண்டில் நீங்கள் கேட்டு இல்லாத இசையை அந்த நிகழ்ச்சியில் கேட்கலாம் என்றார்.

இளையராஜா அவர்கள் மியூசிக் கம்போஸ் செய்யும் போது வாத்திய கருவிகளை லைவாக வாசிக்க வைத்து பாடகர்களை பாட வைத்து ரெக்கார்ட் செய்வார். அதனால் தான் இன்றளவும் இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன என்ற கருத்து உண்டு.

இசையமைப்பாளர்கள் கட்டிடம்
இசையமைப்பாளர்கள் கட்டிடம்

எதிர்காலத்தில் இசை அமைப்பாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கட்டிடம் உருவாகும் பட்சத்தில் மீண்டும் இது போன்ற இசையை தமிழ் சினிமாவும் இந்திய இசை எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நடிகர் அஜித் செய்த திருட்டு... வைரலாகும் சென்டிமென்ட் ரகசியம்!
இசையமைப்பாளர்கள் கட்டிடம்

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களுக்கு கட்டிடம் நவீன தொழில்நுட்பத்தில் கட்டுவது என்பது இசையமைப்பாளர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமயத்திற்கும் ஒரு நல்ல இசையை எதிர்காலத்தில் கேட்க ஒரு நல்வாய்ப்பாக அமையும். விரைவில் வடபழனியில் மிகப் பிரம்மாண்டமான இசை அமைப்பாளர்களுக்கான சங்க கட்டிடம் கட்ட வாழ்த்துவோம்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இணைந்து வடபழனியில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்க உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இசையமைப்பாளர்கள் கட்டிடம் பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com