பாக்கெட் நாவல் முதல் சேயோன் வரை: புதிய கதைக்களத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள்!

வழக்கமான பாதையை மாற்றும் புதிய முயற்சிகள்! தமிழ் சினிமாவின் புது வரவுகள் என்னென்ன?
Pocket Novel - Seyon | தமிழ் சினிமா
Pocket Novel - Seyon | தமிழ் சினிமா
Updated on

பாக்கெட் நாவல்

நாவல் உலகின் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட 1980-1990களில் ராணிமுத்து, மாலைமதி ஆகிய நாவல்கள் வாசகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவை. அந்தக் காலக்கட்டத்தில் ஜிஏ பப்ளிகேஷன், ஜிஏ அசோகன், ராஜேஷ் குமார் எழுதும் க்ரைம் நாவல், பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதும் எ நாவல் டைம் (பின்னாளில் பாலகுமாரன் எழுதினார்) என பிரபல எழுத்தாளர்கள் ரெகுலராக எழுதுவதற்காகவே தனி இதழ்கள் தொடங்கினார்.

இது பத்திரிக்கை உலகில் அதுவரை யாரும் செய்யாத புரட்சி. செம சேல்ஸ் ஆனது. பாக்கெட் நாவல் என்று ஒன்றை உருவாக்கினார். மாதா மாதம் ஒரு பிரபல எழுத்தாளர் ஒரு நாவல் எழுதுவார்.

இந்த பாக்கெட் நாவல் சைஸ் பேருக்கு ஏற்றபடி பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் அளவு சிறிய அளவில் இருந்தது.

ராணிமுத்து, மாலைமதி, ராணி காமிக்ஸ் வாங்கிய வாசகர்களுக்கு அதன் சைஸ் செட் ஆகி இருந்தது. புதிய வடிவில் பாக்கெட் சைசில் நாவல் வர அதற்கு வாசகர்கள் ஆதரவும் பெருகியது.

2020 கொரானா காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு சறுக்கல் ஏற்பட்டு பல பத்திரிக்கைகள் அச்சுப்பணியை நிறுத்தி விட்டன. அந்தப்பட்டியலில் பாக்கெட் நாவல் கூட ஒன்று தான்.

இப்போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க, இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் ஒரு க்ரைம் திரில்லர் படம் உருவாக இருக்கிறது.

விஜய் சேதுபதியின் மெகா ஹிட் படமான மகாராஜா ஒரு க்ரைம் திரில்லர் என்பதால் இதுவும் அதே டைப்பில் எடுக்க முடிவாகி இருக்கிறது.

தியாகராஜன் குமார ராஜாவின் முதல் படம் ஆரண்ய காண்டம். கமர்ஷியல் ஆக சூப்பர் ஹிட் இல்லை என்றாலும் மீடியாக்களால் கொண்டாடப்பட்ட படம் அது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது.

2011 ல் முதல் படம் ஆரண்ய காண்டம் வந்தாலும் அவரது அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ் 8 ஆண்டுகள் கழித்து 2019 ல் தான் வெளிவந்தது. இதுவும் கமர்சியல் ஹிட் கிடையாது. ஆனால் பத்திரிக்கைகள், சினிமா ஆர்வலர்கள் கொண்டாடிய படம் இது.

மீண்டும் 4 ஆண்டுகள் இடைவெளி. அடுத்து வெப் சீரிஸ். மாடர்ன் லவ் சென்னை எனும் வெப் தொடரில். நினைவோ ஒரு பறவை என்ற குறும்படம் வெளியாகி பலரின் பாராட்டுதல்களை பெற்றது.

இப்போது தியாஜராஜன் குமார ராஜா + விஜய் சேதுபதி காம்போவில் உருவாகும் புதுப்படம் பாக்கெட் நாவல். இதன் கதை என்னவாக இருக்கும்? என்று சினிமா இண்டஸ்ட்ரியில் விசாரித்தபோது யூக அடிப்படையில் கிடைத்த தகவலைப் பகிர்கிறேன்...

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: வாரண்ட் - காவல் நிலையத்தின் உண்மை முகம்!
Pocket Novel - Seyon | தமிழ் சினிமா

ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய நாவலில் வரும் கொலை சம்பவம் போலவே நிஜத்தில் நடக்கிறது. போலிஸ், நாவல் எழுதிய ரைட்டரை விசாரிக்கிறது.

ரைட்டரின் தீவிர வாசகன் அந்த நாவலில் வருவது போலக் கொலைகளை செய்கிறானா? அல்லது கொலை செய்து விட்டு அந்த நாவலை உருவாக்குகிறாரா? ரைட்டர் என்ற கோணத்தில் போலீஸ் அணுகுகிறது.

நாவல் ஆசிரியர் ஆக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

பொதுவாக தியாகராஜன் குமார ராஜா படங்களில் கொரியன் மூவியின் தாக்கம் இருக்கும்.

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா கூட ஓல்டு பாய் என்ற கொரியன் மூவியின் இன்ஸ்பிரேசன் தான். இதே கொரியன் மூவியை வைத்து மலையாளத்தில் ரெட்ட என்ற படம் வந்தது.

நாவல் ரைட்டர் கதையில் வரும் சம்பவங்களை வைத்து கொலை செய்வது மாதிரி ஹாலிவுட்டில் கூடப்பல கதைகள் வந்துள்ளன.

பாக்கெட் நாவல் படத்தின் போஸ்டர் டிசைன் பிரமாதமாகப் பேசப்படுகிறது.

Pocket Novel | தமிழ் சினிமா
Pocket Novel | தமிழ் சினிமாImg Credit: IMDb

பாக்கெட் நாவல் ஜி அசோகன் கூட தன் பேஸ் புக் ஸ்டோரியில் பகிர்ந்தார். தன் வாட்சப் ஸ்டேட்டசாக வைத்தார்.

இந்தப் படம் ரிலீஸ் டைமில் பாக்கெட் நாவல் அசோகன் சாரை போலீஸ் விசாரிப்பது போல் நியூஸ் வந்து படத்துக்கு பிரமோசனைக் கொடுக்கலாம். யாருக்குத் தெரியும்?

இதையும் படியுங்கள்:
ரஜினி 173: டாக்டர் வேடத்தில் சூப்பர் ஸ்டார் - இதுதான் முதல்முறையா?
Pocket Novel - Seyon | தமிழ் சினிமா
Seyon | தமிழ் சினிமா
Seyon | தமிழ் சினிமாImg Credit: IMDb

சேயோன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தாய் கிழவி பட இயக்குநர் உருவாக்க இருக்கும் படமான சேயோன் அறிவிப்பு வந்ததுமே, பேராசிரியர் கு ஞான சம்பந்தன் 'சேயோன் என்பவன் யார்? முருகனின் அவதாரமா?' என்ற டைட்டிலில் ஒரு வீடியோப்பதிவு இட்டார்.

இயக்குநர் முருக பக்தர் + கமலின் தீவிர ரசிகர்.

அதனால் விருமாண்டி போல முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் ஆக்சன் கதையாக இருக்கும் என யூகிக்கலாம்.

விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் போல ஒரே கிராமத்தில் ஒரே நாளில் நடக்கும் கதை இது எனப்பேசிக்கொள்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக நடித்ததில்லை. இந்தப் படத்தில் புதிய பரிமாணத்தில் அவரைப் பார்க்கலாம் என்கிறார்கள். இயக்குநர் சிவகார்த்திகேயனின் நண்பர் என்பதால் இருவருக்குள்ளும் நல்ல புரிதல்கள் இருக்கும்.

தாய் கிழவி படம் மூலம் கிராமத்துக்கதை எடுப்பதில் தான் ஒரு விற்பன்னர் என்பதை நிரூபித்த இயக்குநர். காமெடி, செண்ட்டிமெண்ட் கலந்த ஒரு பக்கா ஆக்சன் மூவியைத் தருவார் என எதிர் பார்க்கலாம்.

இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.60 கோடி எனவும் இதுவரை அவர் வாங்கியதிலேயே இதுதான் அதிகபட்ச சம்பளம் எனவும் பேசப்படுகிறது.

தாய் கிழவி படத்திலேயே பல காட்சிகளில் கமல் ரெப்ரன்ஸ் இருந்ததால் கமல் ஹாசனே தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கமல் ரெப்ரன்ஸ் இருக்கும். கமல் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் எனவும் தெரிகிறது.

logo
Kalki Online
kalkionline.com