

1.கொலைச்சேவல்
நடிகர்கள்: கலையரசன், தீபா பாலு, கஜராஜ்
இயக்கம்: துதிவாணன்
இசை: சந்தன்
வகை: ரூரல் கிரைம் மிஸ்டரி திரில்லர் (UA சான்றிதழ்)
கதைக்கரு: ட்ரெய்லரை பார்த்தபோது யூகித்த கதை இது தான்.நாயகன் ,நாயகி இருவரும் திருமணம் ஆன தம்பதி.நாயகி கர்ப்பம் ஆக இருக்க குலதெய்வத்துக்குப் படையல் போட இருவரும் ஒதுக்குப்புறமாக இருக்கும் பாரம்பர்யம் மிக்க ஒரு புராதன கோவிலுக்கு செல்கிறார்கள்.ஏதோ உள்ளுணர்வு தூண்டப்பட நாயகி ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது, நாம் திரும்பிப்போய் விடலாம் என்கிறாள்.ஆனால் நாயகன் கேட்கவில்லை.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.கஜராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.அதன் பிறகு அவர்களுக்கு நேரும் அதிர்ச்சிகரமான சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.இது யுஏ படம்.
2. கெணத்தைக்காணோம் (கிணத்தைக் காணோம்)
நடிகர்கள்: யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன்
இயக்கம்: சுரேஷ் செங்கய்யா ('ஒரு கிடாயின் கருணை மனு' புகழ்)
வகை: கிராமியக் காமெடி / சமூக டிராமா
யோகிபாபு நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை இயக்கியவர் சுரேஷ் செங்கய்யா.ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் மாறுபட்ட ஒரு கிராமியக்காமெடிப்படம் தந்தவர் இவர். அடுத்ததாக பிரேம்ஜி நாயகனாக நடிக்க சத்திய சோதனை என்ற வித்தியாசமான படத்தை தந்து நல்ல விமர்சனங்களை பெற்றார்.மூன்றாவது படமாக யோகி பாபு நடிக்கும் கிணத்தைக்காணோம் படம் அமைகிறது.
கதைக்கரு: வடிவேலு நடித்த ஒரு படத்தில் இங்கே இருந்த கிணத்தைக்காணோம் என வடிவேலு புகார் செய்யும் காமெடி செம ஹிட் ஆனது.அந்த காமெடி டிராக்கில் இருந்து படத்தின் டைட்டில் உருவாகி இருக்கிறது.இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த போது யூகித்த கதை.நாயகன் நாயகியை காதலிக்கிறார்.அந்த ஊரில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது.அரசாங்கத்துக்கு மனு போட்டு ஒரு பயனும் இல்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த ஊரின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்ரமித்து கையகப்படுத்த அரசியல்வாதி திட்டம் இடுகிறான்.நாயகன் ஊர் மக்களுடன் சேர்ந்து போராடி ஜெயிப்பது தான் கதை.மொட்டை ராஜேந்திரன் காமெடி இதில் களை கட்டி இருக்கிறது.
இந்தக்கோயிலின் ஸ்தல வரலாறு பற்றி சொல்லுங்க என மொட்டை ராஜேந்திரன் கேட்க யோகி பாபு "தலைல முடியே இல்லாத நீ தல வரலாறு கேட்கறே.எனக்கு தெரிஞ்ச வரலாறு தல அதுல நடிச்சிருக்கார்.இந்தப்படத்தில் யோகிபாபு + மொட்டை ராஜெந்திரன் காமெடி டிராக் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இதுக்கும் என தெரிகிறது..
3. போலீஸ் பேமிலி (Family)
நடிகர்கள்: சரவணன், காதல் சுகுமார், ராஜா மலைசாமி, நிஷா துபே
இயக்கம்: பாலு
வகை: கேங்ஸ்டர் கிரைம் திரில்லர்
கதைக்கரு: போலீஸ் கஸ்டடியில் இருக்கும் ஒரு தாதாவின் (Gangster) மகன் இறந்துவிட, அதற்குப் பழிவாங்கத் துடிக்கிறான் அந்தத் தாதா. காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தையே குறிவைத்து அவன் கடத்துகிறான். இதில் 'பருத்திவீரன்' புகழ் சரவணன் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். டிரெய்லரில் வன்முறை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
4. அந்தோணி
நடிகர்கள்: கயல் வின்செண்ட், டி.ஜே. பானு, அருள்தாஸ், நிழல்கள் ரவி
இயக்கம்: சுகிர்தன் கிறிஸ்துராஜா + ஜெனோசன் ராஜேஸ்வர்
இசை: இசைஞானி இளையராஜா
வகை: காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா
படத்தின் ட்ரெய்லர் கட்டைப்பார்த்தபோது யூகித்த கதை. நாயகன் ஒரு கிறிஸ்டியன்,நாயகி ஒரு இந்து.இருவரும் காதலிக்கிறார்கள்.போராடிப்பின் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.நாயகன் மீன் பிடி படகில் ஏறி கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் தொழில் செய்பவன்.
குடும்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வரும் பிரச்சனைகளை நாயகன் எப்படிச் சமாளிக்கிறான் என்பதே கதை. இளையராஜாவின் இசை படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. வெஞ்சென்ஸ் (Vengeance)
நடிகர்கள்: அபர்நதி, இளவரசு, ஜான் விஜய்
இயக்கம்: ராகுல் அசோல்
வகை: பொலிட்டிக்கல் கிரைம் டிராமா
டைட்டில் ஆங்கிலத்தில் இருந்தாலும் இது ஒரு தமிழ்ப்படம் தான்.இது ஒரு பொலிடிக்கல் க்ரைம் டிராமா வகையைச்சேர்ந்தது.
நாயகி ஒரு ஐ ஏ எஸ் கலெக்டர்.அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் துணிச்சலாக கடமையை செய்பவர்.இதனால் ஆத்திரமடைந்த வில்லன், அவரைப் பொது இடத்தில் அவமானப்படுத்துகிறான்.
அப்போது தான் நாயகியை பற்றிய மர்மமான பிளாஷ்பேக் வில்லனுக்கு தெரிய வருகிறது.அந்த பிளாஷ்பேக் என்ன?நாயகி வில்லனை எப்படி பழி வாங்கினாள் என்பது மீதிக்கதை.இளவரசு ,ஜான் விஜய் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.பூ ஒன்று புயலானது டைப் புரட்சிக்கதையாக இருக்கலாம்.
இந்த வார ரிலீசில் இது தான் அதீத எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கும் படம்