இன்று சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியீடு!

Mirchi siva
Mirchi siva

எம்.எஸ் அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று மாலை படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வெளியான சூது கவ்வும் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2013ம் ஆண்டு வெளியான இந்தப் படம் புதுமுகங்களாக இருந்த அசோக் செல்வன் மற்றும் பாபி சிம்ஹாவை தமிழ் ரசிகர்களுக்கு எடுத்துக் காண்பித்தது. அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்தார். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சென்ற ஆண்டு சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பும், அந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியானது. மிர்ச்சி சிவா என்றாலே அவரது பந்தா கலந்த காமெடிதான். அதேபோல் சூது கவ்வும் படத்தின் ப்ளாட் என்றால் பணத்தைக் கொள்ளையடிக்கும் கதைதான். ஆகையால் இது மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ஏற்ற படம் என்றே கூற வேண்டும். இதனாலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியது.

சிவா படங்களைப் பொறுத்தவரை ஹிட், ஃப்லாப் போன்றவை வெறும் பெயர்கள்தான். அதையும் தாண்டி ஒரு மன திருப்தியையும் மன நிம்மதியையும் தனது படங்களின் மூலம் கொடுப்பவர் சிவா. அதற்கு உதாரணங்களாகத் தமிழ்ப்படம் 1 மற்றும் 2, இடியட், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும், கலகலப்பு ஆகிய படங்களைக் கூறலாம்.

எம்.எஸ்.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை எஸ்.தியாகராஜன் மற்றும் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்துத் தயாரிக்கின்றனர்.

இதனையடுத்து இந்தப் படத்தின் போஸ்டரை ராஜலட்சுமி இஞ்சினியரிங் காலேஜில் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். ஏனெனில் முதல் படத்தின் வெற்றிக்குக் காரணம் இளைஞர்கள் என்பதால். இதில் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
25 வருடங்களுக்குப் பிறகு இணையும் பிரபு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான்!
Mirchi siva

இதனையடுத்து இன்று மாலை 6.30 மணிக்குப் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசரை முதல் படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வெளியிடவுள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் காமெடி நன்றாகவே க்ளிக் ஆகியுள்ளது என்று படக்குழு தெரிவித்தது. இந்த ஆண்டு கோடையில் இப்படம் வெளியாகும் என்றுக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com