இணையத்தை கலக்கும் தல அஜித்தின் 'சில்லா சில்லா' பாடல்!

Ajith kumar
Ajith kumar
Updated on

தல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வரவிருக்கிறது. தற்போது துணிவு படத்தின் பாடல் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மெகா பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. யூடியூபில் இதுவரை 8.9 மில்லியன் (வியூஸ்) பார்வையாளர்களை 'சில்லா சில்லா' பாடல் பெற்றுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித் நடிப்பில் துணிவு படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் நேற்று வெளியானது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Ajith kumar
Ajith kumar

பாடலில் ‘இருப்பது ஒரு லைஃப் அடிச்சிக்க சியர்ஸ்,போனது போகட்டும் தேவையில்ல டியர்ஸ்..’ இந்த பாடல் வரிகள் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அஜித் என்றாலே நிச்சயம் பைக் காட்சிகள் கட்டாயம் படத்தில் இருக்கும்.

இந்த படத்திலும் பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் நம்புகின்றனர். பொங்கல் விடுமுறையில் வரவிருப்பதால் இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com