ப்ரீ ரிலீஸ் பிசினஸில் கலக்கி கொண்டிருக்கும் தல அஜித்தின் ‘துணிவு’ ! ,

Ajith - vijay
Ajith - vijay

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதிவெளியாகவுள்ளது.ஹெச் வினோத் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம். தல அஜித்துக்கு கம்பேக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அவரது படங்களுக்கான ப்ரோமோஷனலில் கலந்துகொள்ளாத நிலையில், துணிவு பிஸினஸ் குறித்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன. இதனிடையே தற்போது துணிவு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி திரையுலகில் ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் அஜித், தற்போது துணிவு படத்தில்நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர்ச்சியாக அவரதுபடங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் துணிவு படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளதால், துணிவு ரிசல்ட் எப்படி இருக்கும் என பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப் படுகிறது.

Varisu - Thunivu
Varisu - Thunivu

அஜித் எப்போதும் தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கிடையாது. அதேபோல் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்து விட்டார். அதேநேரம், ஏற்கனவே அஜித்தின் துணிவு - விஜய்யின்வாரிசு என்ற போட்டி இணையத்தை கலங்கடித்து வருகிறது. இதனால் துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், துணிவு படத்தின் ப்ரீ தியேட்டர் ரிலீஸ் பிஸினஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக அஜித்தின் படங்கள் தோல்வியை தழுவினாலும், துணிவு பிஸினஸ் தாறுமாறாக நடந்துள்ளதாம். அஜித் சம்பளம் 70 கோடி உட்பட படத்தின் மொத்தபட்ஜெட் 160 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடுதியேட்டர் உரிமை 60 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். அதேபோல் கேரளாதியேட்டர் ரைட்ஸ் 2.50 கோடி ரூபாய், கர்நாடகா தியேட்டர் உரிமை 3.50 கோடிஆந்திரா, தெலங்கனா உரிமை 1.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும், இந்தி டப்பிங் ரைட்ஸ் 25 கோடி ரூபாய் வரை விலைபோயுள்ளதாம்.

அதேபோல், வெளிநாட்டு தியேட்டர் உரிமை 14 கோடி ரூபாய்க்கும், ஆடியோரைட்ஸ் 2 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ஓடிடிஉரிமையை நெட்பிளிக்ஸ் 70 கோடி ரூபாய்க்கும், சாட்டிலைட் ரைட்ஸை கலைஞர்டிவி 20 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். இதனால் துணிவு திரைப்படம்ரிலீஸுக்கு முன்பே மொத்தம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனைபடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com