நாளை ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட்.. தலைவர் 170 படத்தின் புது அப்டேட்!

தலைவர் 170
தலைவர் 170

நாளை ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளது.

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170வது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் இந்திய அளவில் நல்ல வசூலை பெற்றது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள தலைவர் 170 படம் ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாக படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை வெளியானது. அதன்படி படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு லைகா நிறுவனம் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், நாளை தலைவர் 170 படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வீடியோ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com