கௌதம் வாசுதேவ் மேனனுடன் தளபதி 67ல் இணையும் இன்னொரு முக்கிய இயக்குநர்!

கௌதம் வாசுதேவ் மேனனுடன் தளபதி 67ல் இணையும் இன்னொரு முக்கிய இயக்குநர்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தளபதி விஜய்-இயக்குநர் வம்சி கூட்டணியில் உருவாகியிருக்கும் 'வாரிசு' திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துவங்கி விட்டது.

விஜய்யின் 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், த்ரிஷா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இருந்தும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில், 'வாரிசு' திரைப்படம் வெளியான பின்பு அறிவிப்புகள் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

ரசிகர்களும் 'தளபதி 67' படத்தின் அப்டேட் எப்போது வரும் எனக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கினும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் 'தளபதி 67'ல் நடிக்கவில்லை என தகவல் வெளிவந்தது.

இது ஒருபுறமிக்க, சமீபத்திய 'தளபதி 67' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மிஷ்கின் இருந்துவந்ததாக தகவல்கள் அறியப்படுகிறது. அதன்படி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மிஷ்கின் இருவரும் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கினும் 'தளபதி 67'ல் இருப்பது உறுதியாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com