தளபதி 68 பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

தளபதி 68
தளபதி 68

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இதன் படப்பிடிப்பு 'லியோ' ரிலீசுக்கு பின்பாக துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்து விட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கனவே இப்படம் 2024ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இப்போது வாரிசு ஸ்டைலில் தளபதி 68 டீம் அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து மாஸ் காட்டவுள்ளது.

Thalapathy68
Thalapathy68

அதன்படி, டிசம்பர் 31ம் தேதி மாலை தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு நியூ இயர் ஸ்பெஷலாக இரண்டாவது போஸ்டரை வெளியிடவுள்ளார்கள் என தெரிகிறது. இறுதியாக ஜனவரி 1ம் தேதி மாலை தளபதி 68 டைட்டில் போஸ்டர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com