தளபதி 68 பட டைட்டில் அறிவிப்பு.. அடுத்தடுத்து வரும் போஸ்டரால் ரசிகர்கள் குஷி!

GOAT
GOAT
Updated on

தளபதி 68 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், லைலா, பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மைக் மோகன், ஜெயராம், யோகி பாபு என பல கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் குறித்து பல கருத்துகள் வெளிவந்த நிலையில், படத்தின் பெயர் GOAT என அறிவிக்கப்பட்டது. அதாவது Greatest Of All the Time என்பதே இதற்கு அர்த்தம். பெயரை கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து இன்று புத்தாண்டை முன்னிட்டு அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. போஸ்டருடன் தொடங்கிய இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டுக்கான தொடக்கம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தில் பழைய விஜய் தோற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், போஸ்டரின் அடிப்படையில் விஜய் 2 வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com