தங்கலான் பட ட்ரைலர் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan
Thangalaan

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் தொடரும் பாலா - விக்ரம் போட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் வந்துள்ளது. விக்ரமின் மகன் நடித்த ஆதித்ய வர்மா பட பிரச்சனையை தொடர்ந்து இருவருக்கும் கருத்த் வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கலானும், வணங்கானும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார் பா.ரஞ்சித். ஏற்கனவே இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் என அடுத்தடுத்து ரிலீஸாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தில், விக்ரம் வித்தியாச தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்.

மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. நேற்று இரவு தான் பாலாவின் வணங்கான் பட ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்று வரும் நிலையில், தங்கலான் பட ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் படத்தின் ட்ரைலர் நாளை அதாவது ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை எந்த நேரத்தில் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படுகின்றது என்பது குறித்து படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடவில்லை.

இதையும் படியுங்கள்:
ஒளவையாரிடம் 'ஞான இட்லி' பெற்றாராம் கமல்!
Thangalaan

இந்த படத்திற்கும், வணங்கான் படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளதால் போட்டி கடுமையாகி கொண்டே போகிறது. இதனால் இவரது இசையில் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இரண்டு இயக்குநர்களும் தரமான படங்களை படைத்து வரும் இயக்குநர்களாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என கூறப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com