ராணுவ வீரர்களுக்காக தனது சொத்தின் ஒரு பாகத்தை எழுதிக் கொடுத்த அந்த பிரபல நடிகர் பற்றிப் பார்ப்போமா?
சொத்துக்காக குடும்பத்திற்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது ஒருவர் தனது சொத்தில் ஒரு பங்கை நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றால், அது பாராட்ட வேண்டிய விஷயம் தானே? முதலில் அவர் யாரென்று தெரிந்துக்கொள்வாமா?
80களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற இவர், தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். சிவாஜி படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற இவர்தான் தனது சொத்தை ராணுவ வீரர்களுக்கு எழுதுக் கொடுத்தவர்.
ஆம்! நடிகர் சுமன்தான். தற்போது இவர் ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்தார். இந்த படவிழாவின்போது ஒருமுறை சுமன் பேசியதைப் பார்ப்போம்.
“ இதுவரை 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். நமது நாட்டின் உண்மையான வாட்ச்மேன் ராணுவ வீரர்கள். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஹைத்ராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார்.
நானும் அந்த முடிவை வரவேற்றேன்.
நாம் உயிரோடு இருப்பதற்காக எந்த ஒரு வசதியும் இல்லாமல், உயிரையும் பொருட்படுத்தாமல் கடுமையான சூழ்நிலையில் பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை பாதுகாக்கின்றனர்.
இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 175 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்.” என்று பேசினார்.
இன்று நடிகர் நடிகைகள் குறித்த நல்ல செய்திகளைப் பகிர்வதற்கு ஆளே இல்லை என்பதுபோல்தான் இருக்கிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி ட்ரெண்டாக்குகிறார்கள். ஆனால், ஏன் இதுபோன்ற செய்திகள் யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்தாலும் பகிர்வதில்லை….