நடிகையிடம் 70 வருடங்கள் கால்ஷீட் கேட்ட இயக்குநர்… அப்படி என்ன படம் சார் அது?

Saranya
Saranya

பொதுவாக நடிகர்களிடம் ஆறு மாத காலமோ, மிஞ்சி மிஞ்சி போனால், ஐந்து வருடங்களோ கால்ஷீட் கேட்கலாம். ஆனால், இங்கு ஒரு இயக்குநர் ஒரு படத்தில் நடிக்க அந்த நடிகையிடம் சுமார் 70 வருடங்கள் கால்ஷீட் கேட்டாராம். பாருங்களேன்…!

திரையுலகில், எப்போதும் இயக்குநர்கள் அடுத்து என்ன படம் எடுக்கலாம், எந்த கதையை இயக்குவது, நம் சொந்த வாழ்க்கையில் எதையெல்லாம் எடுக்கலாம், நாம் அன்றாடம் பார்ப்பவர்களிடமிருந்து எந்தக் காட்சியை எடுக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். ஆகையால், வாழ்வில் நடக்கும் அனைத்தையும் காட்சியாகவே பார்ப்பார்கள். அதிலும் சிலர் பேசும்போது எப்போதும் சினிமா பற்றி பேசுவார்கள் அல்லது சாதாரண டாப்பிக் பேசும்போதும் கூட சினிமா பாணியில் பேசுவார்கள்.

அப்படியிருக்கும்போது ஒரு இயக்குநருக்கு காதல் வந்தால்? அவர் தன் காதலியிடம் காதலை சொன்னால்? அப்படி ஒரு க்யூட்டான ப்ரொப்பஸல் சீன் தான் அந்த நடிகையின் வாழ்வில் செய்திருக்கிறார் ஒரு இயக்குநர்.

90 காலகட்டங்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா. இப்போது தனுஷ், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர், அந்தக் காலத்தில் நாயகன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இப்போது இருக்கும் மேக்கப்களைப் பயன்படுத்தாமல், இயற்கை கொடுத்த அழகுடன் நடித்தவர்களில் சரண்யா குறிப்பிடவேண்டிய ஒருவர்.

சரண்யாவுடைய கணவர் இயக்குநர் மற்றும் நடிகர் பொன்வண்ணன். இவர் ஏராளமான படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர். தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர், மூன்று படங்களையும் இயக்கியுள்ளார்.

அவர் நடிகை சரண்யாவிடம் தனது காதலை எப்படி கூறினார் என்று ஒரு பேட்டியில் சரண்யாவே கூறியிருக்கிறார்.

“எனக்கு அவர் போன் செய்து, நான் ஒரு படம் எடுக்க போகிறேன். அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றார். அதற்கு நான், அப்டியா சார், எத்தனை நாள் என்று கேட்டேன். அதற்கு அவர் 70 வருஷம் வேண்டும் என்றார். எனக்கு அப்படி சொன்னதும் புரிந்துவிட்டது. உடனே ‘தெரிந்துதான் பேசுறீங்களா’ என்று கேட்டேன். தெரியாமல் கூட பேசுவார்களா என்று அவர் கேட்டார். சரி சார்.

இதையும் படியுங்கள்:
திரைத்துறையில் அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி!
Saranya

நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் என்றேன் அவரிடம். நல்லா யோசிச்சு சொல்லுங்கள் ஒரு பிரச்சனையும் இல்லை. உடனே நீங்கள் நினைத்துவிடாதீர்கள், நான் உங்கள லவ் பண்றேன். நீங்க இல்லன்னா செத்துடுவேன். அப்டிலாம் நெனைக்காதீங்கன்னு சொன்னாரு. நான் போனை வைத்துவிட்டு அப்பாவிடம் கூறினேன். என்னப்பா இவரு இப்டி பேசுறாருன்னு. ஒரு நாள் கூட ஷூட்டிங்ல பேசுனதே இல்லை.. வேற வேல இல்லாம பேசுறாரு போல…ன்னு சொன்னே.” என்றார் சரண்யா.

இப்டி கூட ப்ரப்போஸ் பண்ணலாம் போலயே… நல்லாருக்குயா!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com