Ashwath Marimuthu
Ashwath Marimuthu

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

Published on

ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கழிவறை சுத்தமாக இல்லாததால் ஹீரோயினுக்காக அந்தப் படத்தின் இயக்குநரே சுத்தம் செய்துக் கொடுத்ததாக அந்தப் படத்தின் ஹீரோ பேசியிருக்கிறார். அதுபற்றிப் பார்ப்போம்.

தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு படம் ஓ மை கடவுளே. இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு feel good movie யாக இருந்தது. அசோக் செல்வன், வானி போஜன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு சிறந்த காதல் கதையாக இன்றும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு பின்னரே அசோக் செல்வனின் நடிப்புத் திறமை மக்களுக்கு தெரிய வந்தது. அதன்பின்னரே போர் தொழில் போன்ற நல்ல படங்களின் வாய்ப்பு அவருக்கு வந்தது. சினிமாவில் அவரின் வெற்றிப் பாதைக்கு ஒரு முக்கியமான படம் இது என்றே கூறலாம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தைப் பற்றித்தான் அசோக் செல்வன் பேசியிருக்கிறார்.

“ ரித்திகா வந்து நிறைய தண்ணி குடிப்பாங்க.. அதனால எங்கப் போனாலும் முதல Rest Room எங்கனுதான் தேடனும் production fulla.. அப்போ ஒரு சீன் எடுக்க லாஜ் போணும்… எல்லாரும் அவுட் (தூங்கிட்டாங்க)  நாங்க மட்டும்தான் முழிச்சு வேல பாத்துட்டு இருந்தோம்… கஷ்டப்பட்டு முழிச்சுட்டு இருந்தோம்… சின்ன பட்ஜெட்லாம் அப்டிதான்… அப்போ ரித்திகா வந்து Guys.. Where is the Rest room?? னு கேட்டு வந்தா.. நாங்க அதலாம் இல்ல.. லாஜ்ல ஒரு Rest ரூம் மட்டும்தான் இருக்கு.. அங்க use பண்ணிக்கோன்னு சொன்னோம்.. போய் பாத்துட்டு Its not cleanனு போய்ட்டா… அப்போ He cleaned the Restroom…” என்று இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை கைக்காட்டினார்.

இதையும் படியுங்கள்:
வன்மத்தைக் கக்கிய அர்னவ்… எச்சரித்த விஜய் சேதுபதி... ரசிகர்களின் கருத்து இதுதான்!
Ashwath Marimuthu

அப்போது அஸ்வத் இது குறித்து பேசினார், “ ஷாட் எடுக்கனும்… டைம் முடியுது.. அங்க யாருமே இல்ல… ரொம்ப சின்ன crew தான் போனோம்... பட்ஜெட் கம்மிதான்.. படம் பண்ணனும்…” என்று பேசினார்.

அப்போது அசோக் செல்வன், “இல்ல நா என்ன சொல்ல வரேனா.. இதுனாலதான் அந்த படம் வெற்றியடஞ்சுது… இதுனாலதான் He is a successful Director…” என்று பேசினார்.

ஒரு மனுஷன் முன்னேறதுக்கு என்னலாம் செய்ய வேண்டியதா இருக்குப் பாருங்களேன்….

logo
Kalki Online
kalkionline.com