

லியோனார்டோ டீகாப்ரியோ என்ற ஹாலிவுட் நடிகரை பற்றி கேள்வி படாதவர்கள் இல்லை எனலாம். அவர் 1998 இல் ஒரு சமயம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியில் பட பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது அந்த லொகேஷனக்கருகில் ஒரு சிறுவன் அட்டை பெட்டிக்குள் உறங்கி கொண்டிருப்பதை பார்க்க நேர்ந்தது. அவர் தன உதவியாளரை அழைத்து அந்த பையனுக்கு தினமும் தன் ஷூட்டிங் ஷெடூள் முடியும் வரை உணவு வாங்கி கொடுக்குமாறு கூறினார். அந்த லொகேஷனை விட்டு ஷூட் முடிந்து போகும்முன் அந்த பையனை பின் தொடர்ந்து சென்ற போது அவன் அம்மா ஒரு காரில் வசிப்பதும் அவன் தந்தை இல்லாதவன் என்றும் தெரிய வந்தது. உடனே அவர் செய்தது என்ன தெரியுமா?
அவர்களுக்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாது பையனை ஒரு நல்ல ஸ்கூலில் சேர்த்து அவன் லா காலேஜ் வரை படித்து பட்டம் பெறவும் பண உதவி செய்தார். மார்கஸ் என்ற அந்த பையன் 2022இல் வீடற்ற மக்களுக்காக வாதாடி வெற்றியும் பெற்றான். அதன் விளைவாக வீடற்றவர்களுக்காக ஒரு மசோதாவே நிறைவேற்றபட்டது.
இது சம்பந்தமாக நடைபெற்ற பிரஸ் மீட்டில் பேசும் போது தான் எப்படி சிறுவனாக இருந்த போது அட்டை பெட்டியில் உறங்கினான் என்பதையும் தன்னை எப்படி டீகாப்ரியோ இந்த நிலைக்கு உயர்த்தினார் என்பதையும் கூறி நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அப்போது தான் டீகாப்ரியோ செய்த அந்த அரிய செயல் மற்றவர்க்கு தெரிய வந்தது.
இருட்டில் தத்தளிப்பவர்கள் மேல் விளக்கொளி செலுத்தினால் அந்த ஒளி நமக்கும் திரும்ப வரும் என்பது உறுதி.