11 வருடங்கள் கழித்து வெளியாகும் தமிழ்ப்படம்!

Tamil Film
Tamil Film

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 11 வருடங்களாக வெளிவராமல் இருந்த ஒரு படம் தற்போது வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் இயக்கி நடித்து சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2024ஆம் ஆண்டில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையை படைத்தது. அரண்மனை 4 படத்திற்கு முன் வெளியான மூன்று படங்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

சிலர் இந்தப் படத்தின் காட்சிகளை ட்ரோல் செய்தாலும், பலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. அப்படி ஒரு தரமான படத்தை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். ஏனெனில், பேய் படங்கள் சமீபக்காலமாக சரியாக ஓடவில்லை என்றிருந்த நிலையில், அந்த நிலையை மாற்றியவர் சுந்தர் சி.

அரண்மனை 4 திரைப்படத்தை தொடர்ந்து கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருடைய இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படம் குறித்து தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகன்னாதர் கோவில்: 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!
Tamil Film

பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் விஷால் உடன் நடித்திருந்தனர். சில காரணங்களால் இப்படம் இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில், 11 ஆண்டுகள் கழித்து இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். வருகிற ஆகஸ்ட் மாதம் மத கஜ ராஜா படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com