பூரி ஜெகன்னாதர் கோவில்: 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் பொக்கிஷ அறை!

Puri Jagannath
Puri Jagannath
Published on

ஒடிசாவின் புகழ்பெற்ற கோவிலான பூரி ஜெகன்னாதர் கோவிலின் பொக்கிஷ அறையை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

பூரிஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது கோயில் நிர்வாகத்திடம் இந்தப் பரிந்துரையை வழங்கவுள்ளது. இதன்பின்னர் ஒடிசா மாநில அரசிடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்துப் போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன.

தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரைச் செய்தது. இந்த நிலையில்  46 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கக்கோரி மாநில அரசுக்கு பரிந்துரை வழங்க ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக விஷ்வநாத் ராத் தெரிவித்தார்.

இதன்படி பொக்கிஷ அறையின் மாதிரி சாவியை  வருகிற 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். ஒருவேளை மாதிரி சாவியைக் கொண்டு அறையை திறக்க முடியவில்லை என்றால் பூட்டை உடைக்கவும் முடிவு செய்துள்ளோம் என விஷ்வநாத் ராத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி!
Puri Jagannath

எனவே, சாவி இருந்தாலும் இல்லையென்றாலும் வருகிற 14ம் தேதி அன்று, கோவிலின் பொக்கிஷ அறையை திறப்பது உறுதியானது. இதனால், மக்களின் எதிர்பார்ப்பு முழுவதும் கோவில் பக்கம் திரும்பியுள்ளது. ஏனெனில் வட மாநிலங்களில் ஒரு முக்கிய கோவில் பூரி ஜகன்னாதர் கோவில். அந்தப் பொக்கிஷ அறையில் இருக்கும் தங்கம் எவ்வளவு இருக்கிறது என்ற கணக்கு வெளியாகும்வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com