

சினிமா ஒரு பெரிய, முக்கியமான பொழுது போக்கு ஆகும். சினிமா மூலம் மக்களை தன் வசம் திருப்ப முடியும். கோடிக்கணக்கான மக்களைத் தன் வசம் ஈர்க்கும் ஒரு காந்தமும்கூட.தமிழ் திரையுலக வரலாற்றில் பல படங்கள் வந்தாலும், ஒட்டுமொத்தப் போக்கையும் மாற்றியமைத்த இரண்டு முக்கியமான திருப்புமுனைகளைப் (Trendsetters) பற்றி இங்கே காண்போம்.
முதல் திருப்புமுனை: 16 வயதினிலே (1977)
இந்த படம் கமல், ஸ்ரீ தேவி மற்றும் ரஜினி நடித்த படம். இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம்.
இதில் புதுமை என்றால் இது முழுக்க முழுக்க கிராமத்தில் எடுத்த படம். கால் ஊனமான சப்பாணி தான் கமல்.
கிராமத்தில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நாயகி தான் ஸ்ரீ தேவி. ரஜினி தான் வில்லன்.சாதாரண காதல் கதை தான். ஆனால் கிராமத்தை மையமாக வைத்து எடுத்தது முழுக்க முழுக்க புதிது. நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். ஏன்..? காந்திமதி கூட அசல் கிராமத்தின் ஆத்தாவாக தூள் கிளப்பி இருந்தார். கமல் ஒரு காட்சியில் கோவணத்துடன் நடந்து வந்து அசத்தி இருந்தார். படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.
இந்த இடத்தில் வேறு ஒருவரையும் பற்றி சொல்லியே தீர வேண்டும்.ஆம்.இளையராஜா.டைட்டில் சாங் அவரே பாடி இருந்தார்.எல்லா பாடல்களும் ஹிட் ஆனது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கேமராவைத் தூக்கிக்கொண்டு கோடம்பாக்கமே கிராமங்களை நோக்கிப் படையெடுத்தது. சின்னக்கவுண்டர், நாட்டாமை, சூரியவம்சம் எனத் தொடர்ந்த கிராமத்துப் படங்களின் வெற்றிக்குப் பிள்ளையார் சுழி போட்டது '16 வயதினிலே' தான்.
2வத திருப்புமுனை எது..? சந்தேகம் இல்லை. 80களில் மத்தியில் வந்த கமல் நடித்த நாயகன்.இதன் இயக்குனர் மணிரத்னம்.
சும்மா சொல்லக் கூடாது. பக்கா படமாக இருந்தது. மும்பையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து படம் எடுத்து இருந்தார்.முதல் காட்சி முதல் இறுதி வரை சிறப்பாக இயக்கி இருந்தார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ராபின் வுட் கதை தான். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை விவரிக்கும் 'ராபின் ஹுட்' பாணி கதை இது. ஒரு டானின் கதையை இவ்வளவு நுணுக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொன்னது தமிழுக்கு அப்போது புதிது.
இந்த படத்தின் வெற்றி ராபின் வுட் கதைகளை போல படங்கள் வர ஆரம்பித்து விட்டன.பாட்ஷா கூட நாயகனுக்கு பிறகு தான் வந்தது.'நாயகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட 'ஆக்ஷன் ஹீரோ' கதைகள் வரத் தொடங்கின. நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்ல, ஜென்டில்மேன் மற்றும் மெகா ஹிட்டான ரஜினியின் பாட்ஷா வரை இந்தப் படத்தின் சாயலை எங்கும் காணலாம்.
மலையூர் மம்மட்டியான் கூட ராபின் வுட் கதையை சேர்ந்த உண்மை சம்பவம். மாபெரும் வெற்றி படம்.
முடிவுரை :
ஆம். இந்த 2 படங்களும் சினிமா உலகையே மாற்றியது. அதனால் தான் நான் அந்த 2 படங்களை சினிமாவில் ஏற்பட்ட திருப்புமுனை ( Trend Setter) என்று கூறுகிறோம்.மீண்டும் இது போன்ற ஒரு காவியத்தைப் படைக்க முடியுமா என்பது சந்தேகமே! இன்றும் வெளிவரும் பல படங்களில் '16 வயதினிலே' மற்றும் 'நாயகன்' படங்களின் சாயல் நிச்சயமாக தெரியும்.
இன்றைய நவீன காலத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. ஆனால், இப்போது நமக்குத் தேவை தொழில்நுட்பம் மட்டுமல்ல; மீண்டும் ஒரு புதிய மாற்றத்தை, ஒரு புதிய திருப்புமுனையை (Trendsetter) உண்டாக்கும் ஒரு படைப்பு!
நமக்கு இப்போது தேவை மற்றும் ஒரு திருப்புமுனை படமே…!
வேண்டும் புதிது! வேண்டும் மீண்டும் ஒரு திருப்புமுனை!!