500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோஷம் கோடிகள் வாங்கும் போது இல்லை - அனிருத்..!

Anirudh Ravichander
Anirudh Ravichander
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான அனிருத் 2011ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் 3. இதில் 'ஒய் திஸ் கொலைவெறி டி' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். இப்பாடல் தமிழ் ரசிகர்களை மட்டும் இன்றி உலக அளவில் பல இசை ஆர்வலர்களை ஆட்டம் போட வைத்தது. முதல் படத்திலேயே தன் திறமையை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்களுக்கும் இசையமைத்து பிரபலமானார்.

இவர் தன்னுடைய இசை பயணத்தில் ஆரம்பத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார். ஆனால் இப்பொழுது இவர் தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி, தெலுங்கு போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் கூட கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கிய இவர் தற்போது கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் அனிருத் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தவர் தனது ஆரம்பகால வாழ்க்கையை நினைவுகூர்ந்து மனம் திறந்து பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன்னுடைய சின்ன வயதில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசியது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ‌

சின்ன வயதில் கல்யாணத்திற்கு வாசிக்க சென்ற பொழுது 500 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். சில சமயங்களில் வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்துவிட்டு நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆனால் இப்பொழுது எவ்வளவு கோடி சம்பாதித்தாலும் அந்த சந்தோஷம் கிடைப்பதில்லை என்று தன்னுடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசியது இப்போது வைரலாகி இருக்கிறது.

இப்பொழுது எவ்வளவு தான் பரபரப்பாக இசைப்பணியில் மூழ்கி இருந்தாலும் முன்பு கிடைத்த சந்தோஷம் இப்போது இல்லை. சிறு வயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து, பணம் மட்டுமே வாழ்க்கையின் முழு மகிழ்ச்சியில்லை என்பதைக் கூறும் வகையில் ரசிகர்கள் இடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'வித் லவ்' - தியேட்டருக்கு போகலாமா? வேண்டாமா?
Anirudh Ravichander
logo
Kalki Online
kalkionline.com