கெட்டவார்த்தைப் பேசிய நடிகை... துரத்தி துரத்தி அடிக்கப் போன நாகார்ஜுனா!

Nagarjuna
Nagarjuna

தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனாவை ஒரு ஹீரோயின், Good morning என்று கூறிவிட்டு, உடன் ஒரு கெட்ட வார்த்தையும் பேசியுள்ளாராம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அந்த ஹீரோயின் பகிர்ந்துள்ளார்.

தற்போது ஒரு நடிகை மரியாதை இல்லாமல் பேசினாலே சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் செய்திகள் பரவும். ஆனால், இங்கு ஒரு நடிகை கெட்டவார்த்தையே பேசியிருக்கிறார். அது வேறு யாரும் இல்லை நடிகை குஷ்புதான்.

இவர் பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர். ஆகையால், வந்த புதிதில் மொழி தெரியாமல் பெரிதும் தடுமாறினார். அதுவும் தமிழ் மட்டுமல்ல, கன்னடா, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் அப்போது நடித்ததால், அந்த இளம் வயதில் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அந்தப் படங்களில் வேலை செய்யும் அனைவரிடமும் பேசி மொழிகளை கற்றுக்கொண்டார்.

ஒருமுறை பிரபு, ரஜினியுடன் ஒரு ஷூட்டிங்கிற்கு சென்றார் குஷ்பு. அவருக்கு பிரபுதான் நெருங்கிய நண்பர். ஆகையால், தமிழ் மொழி கற்றுத்தந்தவரும் அவர்தான். அப்போது ஒருமுறை ரஜினி ஷூட்டிங் முடிந்து செல்லும்போது 'போய்ட்டு வரேன்' என்று குஷ்புவிடம் சொன்னாராம். அதற்கு குஷ்பு 'போடா' என்று பதில் கூறினாராம். அங்கிருந்த அனைவரும் குஷ்புவை நோக்கினர்.

பிரபு வேகமாக வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று குஷ்புவிடம் கூறினார். ஏன் அவர்களெல்லாம் அப்படித்தானே கூறினார்கள் என்று குஷ்பு கேட்டபோது, பிரபு அவர்கள் கூறலாம் நீ கூறக்கூடாது என்று கூறினாராம். ஆனால், அப்போதும் குஷ்புவிற்கு புரியவில்லை. ரஜினி அவர்களிடம் வந்து பரவாயில்லை இந்தப் பெண்ணுக்கு மொழி தெரியாதல்லவா? என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

இப்போது இந்த நிகழ்வைப் பற்றி குஷ்பு கூறும்போது, மொழி தெரியாமல் நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். போடா என்ற வார்த்தை மரியாத குறைவான வார்த்தை என்பது எனக்கு அப்போது தெரியாது என்று சொன்னார்.

நல்ல வேளை கெட்ட வார்த்தை எதுவும் பேசவில்லை என்று நாம் நினைக்கும் சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் சொன்னார். ஆஹா! அப்போ அதுவும் நடந்திருக்கிறதா? என்றுத்தானே யோசிக்கிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
நடிகையிடம் 70 வருடங்கள் கால்ஷீட் கேட்ட இயக்குநர்… அப்படி என்ன படம் சார் அது?
Nagarjuna

ஆம்! ஒரு தெலுங்கு சூட்டிங்கில் குஷ்பு நாகார்ஜுனுடன் நடித்தாராம். அப்போது அங்கு வேலைப் பார்க்கும் ஒருவர் Good morning என்ற வார்த்தையுடன் தமிழ் கெட்ட வார்த்தையை கற்றுத்தந்துவிட்டாராம். நாகார்ஜுனாவிடம் சென்று அதை அப்படியே கூறியிருக்கிறார் குஷ்பு. உடனே அவர் குஷ்புவை 8வது மாடியிலிருந்து கீழ் வரை துரத்தி துரத்தி அடிக்க வந்தார். அப்போது குஷ்பு அதில் என்ன தவறு?, ஏன் என்னை அடிக்க வருகிறீர்கள்? என்று கேட்டபோதுதான், நாகார்ஜுன் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தைக் கூறினார்.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் என்பது போல உறைந்து நின்றிருப்பார் குஷ்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com