

தமிழ் சினிமா பல தசாப்தங்களாக ரசிகர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு கலை வடிவமாக விளங்கி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகமாக இல்லாத துப்பறியும் மற்றும் உளவு (Detective & Spy) கதைகள். இந்த புதிய பாணியை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு வந்து, அதனை பிரபலமாக்கிய பெருமை நடிகர் ஜெய்சங்கர் அவர்களுக்கே உரியது.
ஜெய்சங்கரின் திரைப்பட வாழ்க்கை: இளமையிலிருந்தே அவர் கல்வியிலும் கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சினிமாவில் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவர் அப்பா High cort ல் judge ஆக இருந்ததால் அவரும் law படித்து அதில் ஆர்வம் இல்லாததால் சினிமாவில் வாய்ப்புகளைத்தேடி அலைந்தார். அப்போது சரியான guidence கிடைத்ததால் சோ. ராமசாமி நடத்தும் தியேட்டர் குழுவில் சேர்கிறார். அங்கு தியேட்டர் play, Act பற்றி அறிகிறார். வயதில் குறைவாக இருப்பதால் சரியான ரூல்ஸ் கிடைக்கவில்லை. பிறகு அங்கிருந்து வெளியில் வந்து கல்கி fine Arts யில் சேர்ந்தார்.
ஜெய்சங்கர் – கல்கி Fine Arts இணைப்பு: கல்கி Fine Arts ல் இணைந்த பிறகு. ஜெய்சங்கரின் நடிப்பு வாழ்க்கை உயர்ந்தது. இந்த நிறுவனம் அவரை சாதாரண காதல் ஹீரோவாக அல்ல, டிடெக்டிவ் ஹீரோவாக உருவாக்கியது.
அவரது முதல் படம் “இரவும் பகலும் “ 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றி பெற்றது. பிறகு குறைந்த செலவில் தனக்கான ஒரு தனி அடையாளம் இருக்கவேண்டும் என்று நினைத்து எங்கள் வீட்டு பெண், பஞ்சவர்ணக்கிளி போன்ற காதல் படங்களில் நடித்தார். அதன் பின்னர் drama movie ஆகிய disney யோடு parent Trap என்ற தழுவலில் எடுக்கப்பட்ட “குழந்தையும் தெய்வமும் “ படத்தில் நடித்து வெற்றி பெற்றார். Roll நல்லா இருக்கவும், கதை எவ்வளவு அழுத்தமாக இருக்கிறது என்பதையும் மனதில் வைத்து நடிக்க ஆரம்பித்தார். அதனால் அவருக்கு பெரிய மாற்றம் கிடைத்தது.
பின்னர் T. A.V. Naidu இவரோடு இணைந்து CID சங்கர், நில் கவனி காதலி படங்களில் நடித்தார். இவை Jame Bond movie ஸ்டைலில் இருக்கும். Cow boy படமும்தான். இந்த மூன்று படங்கள் மூலம் தமிழ் நாட்டு மக்கள் ஜெய்சங்கரை கொண்டாடி மகிழ்ந்தனர். அவருடைய மீசை ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது.
ஜெய்சங்கர் படங்களில் அவர் அணிந்த உடைகள், நடந்து செல்லும் ஸ்டைல், பேசும் விதம், சுடும் காட்சிகள், மர்மமான இசை இவை அனைத்தும் ரசிகர்களை மேலைநாட்டு ஜேம்ஸ்பாண்ட் படங்களை நினைவுபடுத்தின. அதனால் மக்கள் அவரை “Tamil James Bond” என்று அழைக்கத் தொடங்கினர்.
ஜெய்சங்கர் தொட்டதெல்லாம் வெற்றி கிடைத்த பிறகும் சம்பளத்தை ஏற்காததால் சிறிய producer ம் அவரிடம் வர தொடங்கினர். இவர் செய்த நல்ல விஷயம்.
1.ஒரு படம் கமிட் ஆகிவிட்டால் அந்த கால்சீட்டை perfect ஆக Maitance பண்ணுவார்.
2.சம்பளம் முதலில் வாங்கமாட்டார். கடைசி நாள்தான் முழு சம்பளம் வாங்குவார். அவர் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சம்பளம் சரியாக போய் சேருமாறு செய்வார். மேலும் குறைந்த சம்பளத்திலேயே கதை நல்லா இருந்தால் நடிப்பார். அதனால் அவருக்கு வெள்ளி நாயகன் என்ற பெயர் கிடைத்தது.
அவருடைய கதாபாத்திரங்கள் பயமின்றி உண்மையைத் தேடும், குற்றவாளிகளை அறிவால் வீழ்த்தும், நீதியை நிலைநிறுத்தும் நாயகர்களாக இருந்தன.
ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்தார். அதில் புத்திசாலித்தனம், அமைதியான சதி, ஆழ்ந்த திட்டமிடல் இவற்றால் பிரபலமானது. அதனால் அவருடைய வில்லன் வேடங்களும் ரசிகர்களால் பாராட்டப்பட்டன. இன்று நாம் ஜெய்சங்கரை “தமிழ் ஜேம்ஸ் பாண்ட்” என்று நினைக்கிறோம் என்றால், அதற்கு முக்கிய காரணம் கல்கி Fine Arts தான்.