அவஞ்செர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிப்பவர்களின் பட்டியல் வெளியீடு!

Avengers
Avengers
Published on

மார்வலின் டூம்ஸ்டே படத்தில் பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைய போகிறார்கள். யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற மார்வல் கதாபாத்திரங்கள் முதலில் புத்தகங்களாகதான் வெளிவந்தன. இதுவரை கிட்டத்தட்ட 32 ஆயிரம் காமிக் புத்தகங்களை மார்வல் வெளியிட்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மார்வல் காமிக் தனது ரசிகர்களாக்கிவிட்டது என்றே கூறலாம். மார்வலின் முதல் காமிக் புத்தகமான ஸ்டான்லீ எழுதிய ‘மார்வல் காமிக்’ என்ற புத்தகம் 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்ப் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதில் முக்கிய கதாப்பாத்திரங்கள் Human torch, Sub- marine, the angel, ka-zar மற்றும் Masked raider ஆகியவையாகும்.

அதன்பின்னர் 1961ம் ஆண்டு எழுத்தாளர் ஸ்டான்லீ மற்றும் ஓவியர் ஜாக் கிர்பை ஆகியோரால் உருவாக்கப்பட்ட Journey in to mystery என்ற புத்தகத்தால் காமிக் கதைகள் பிரபலமாகத் தொடங்கியது. வெளிவந்த அனைத்து மார்வல் புத்தகங்களும் உலகளவில் மிகவும் பிரபலமாகின. இந்த மார்வல் ‘காமிக் உலகத்தில்’ கிட்டத்தட்ட 80 ஆயிரம் கதாப்பாத்திரங்கள் உள்ளன.

மார்வல் காமிக் புத்தகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு முதல் முறை Iron man என்ற கதாப்பாத்திரத்தை வைத்து படம் வெளியானது. இது உலகளவில் மார்வலை இன்னும் பிரபலமாக்க செய்தது. கேப்டன் அமெரிக்கா, வாண்டா, ஸ்பைடர் மேன், விஷன், தோர், ஹாக்கே, கமோரா, ஹல்க், தானோஸ் போன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் பயன்படுத்தி இதுவரை 35 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மார்வலின் அடுத்த படமான அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற Robert Downey Jr. வில்லன் கதாபாத்திரமான Dr. Doom வேடத்தில் நடிப்பதாக அறிவித்தனர்.

இப்படத்தில் தமிழ் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவன்ஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களான தோர், லோகி, கேப்டன் அமெரிக்கா, ஆண்ட் மேன், ஷாங்சி உள்ளிட்ட மார்வலின் முக்கிய கதாப்பாத்திரங்களும் படத்தில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பச்சோந்தி மனிதர்கள் - சுயநலமா? தற்பாதுகாப்பா?
Avengers

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com