சிவகார்த்திகேயனுடன் இணையும் அரசியல் பிரபலம்… யார் அவர்?

Sivakarthikeyan
Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அவரது 25வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அரசியல் பிரபலம் ஒருவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம், குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. ஒரு பக்காவான என்டர்டெயின்மென்ட் மூவியாக வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது என்றே கூறலாம். அயலான் படத்திற்கு முன்னர்வரை சிவகார்த்தியன் நடிப்பில் வெளியான சில படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

அந்தச்சூழலில் அயலான் படம் அவருக்கு நன்றாகவே கைக்கொடுத்தது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்தார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகமாகவுள்ளது.

அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். வெங்கட் பிரபு தற்போது The Goat படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இதனையடுத்து, அவர் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன.

அந்தவகையில்தான், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அரசியல்வாதி ஒருவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்றவர்களும், அதேபோல் அரசியலில் இருக்கும் சிலர் சினிமாவில் தலைக்காட்டுவதும் வழக்கம்.

இதையும் படியுங்கள்:
நாளை பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்... கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்!
Sivakarthikeyan
Sivakarthikeyan with seeman
Sivakarthikeyan with seeman

அந்தவகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சீமான் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இதற்காக சீமான் அவர்களை, படக்குழு முதலில் அணுகிப் பேசியுள்ளனர். இதன்பின் சீமானின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்திற்காக சீமானை நேரில் சந்தித்தது போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

வெங்கட்பிரபுவின் The Goat படமும், சிவாவின் அமரன் படமும் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் வேலையில், இரு கைகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் அடுத்தப் படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com