நாளை பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்... கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்!

Vijay
Vijay
Published on

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் 60க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று சிகிச்சையில் இருப்பவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட நபரின் உறவினரான பெண் ஒருவர், விஜயின் காலில் விழ முயன்றார். அவரை தடுத்த விஜய், அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, விஜய் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, இந்த கள்ளசாராய மரணங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக, அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவிப்பு என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ரயில் - இது தமிழ் நாட்டுக்குத் தேவையான ரயில்!
Vijay

எனவே அவரது உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலில் நுழைந்த பிறகு தனது முதல் பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடன் காத்து கொண்டிருந்த நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பால் சற்று கவலையடைந்துள்ளனர். ஆனாலும் கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com