கூலி படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

coolie movie pre booking
coolie movie
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், டிக்கெட் முன்பதிவு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில திரையரங்குகளில் 'கூலி' படத்தின் டிக்கெட் விலை ரூ.2000 வரை விற்கப்படுவதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள சில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், சிறப்பு காட்சிகள் மற்றும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ₹500 முதல் ₹1000 வரை விற்கப்பட்ட நிலையில், ஒருசில இடங்களில் ₹2000 வரை விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

பெங்களூருவில் 'கூலி' படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அங்கேயும் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ₹2000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அங்குள்ள ஸ்வாகத் ஷங்கர்நாக் திரையரங்கில், காலை 6.30 மணிக்கு முதல் காட்சிக்கு ₹2000 டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டது. ₹1500 மற்றும் ₹1000 கட்டண டிக்கெட்டுகளும் இருந்தன. ஆனால், இந்த அதிக விலை கொண்ட டிக்கெட்டுகள் அனைத்தும் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டன.

பொதுவாக, முதல் நாள் முதல் காட்சி மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், ₹2000 என்பது அரசின் நிர்ணயித்த விலையை விட மிக அதிகம். இதனால், இது நியாயமற்ற செயல் என்றும், ரசிகர்களை சுரண்டும் முயற்சி என்றும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

COOLI MOVIE TICKET CHARGES
COOLI TICKETIMAGE SOURCE : BOOKMYSHOW

கும்பகோணம் போன்ற சில பகுதிகளில், சிறப்பு காட்சிக்கான டிக்கெட் ₹400-க்கு விற்கப்படுவதால், ரஜினி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து, விலையைக் குறைக்காவிட்டால் சிறப்பு காட்சிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
சிந்து நதியில் அணையை கட்டினால்...! இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான் இராணுவ தளபதி!
coolie movie pre booking

இந்த விவகாரம் குறித்து படக்குழுவோ அல்லது திரையரங்க உரிமையாளர்களோ எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. அதிகப்படியான டிக்கெட் விலை, உண்மையான ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூலை கூலி படம் நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com