சரோஜா தேவிக்கு சம்பளம் தராத தயாரிப்பாளர்… என்ன செய்தார் தெரியுமா நடிகையின் அம்மா?

Saroja devi
Saroja devi
Published on

பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு ஒரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காததும், அதற்கு அவர் அம்மா செய்த விஷயத்தையும் குறித்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் 69, 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகை சரோஜா தேவி. இன்றும் அவரது நடிப்பும் பேசப்பட்டுதான் வருகின்றது. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தவர் இவர்.  கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த சரோஜா தேவி, மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்

எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ரூ. 60,000த்தை கடந்ததால் பெண்கள் அதிர்ச்சி
Saroja devi

அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது.

ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அந்தவகையில் 1956ம் ஆண்டு தமிழில் வெளியான படம்தான் கோகிலவாணி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் . இந்த திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு சம்பளம் கொடுக்காததைப் பற்றி பேசியிருக்கிறார் கலைஞானம் அவர்கள்.

கோகிலவாணி படத்தை இயக்கி தயாரித்தது எஸ்.ஏ. நடராஜன். இத்திரைப்படம் முதலில் கன்னடத்தில் வெளியானது. பின் தமிழில் வெளியிடப்பட்டது. சரோஜா தேவிக்கு சம்பளமாக 1000 ரூபாயும் அட்வான்ஸ் 101 ரூபாயும் பேசப்பட்டது. ஒருமுறை சென்னையில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எஸ் ஏ நடராஜன் அவர்கள் தங்கி இருந்தார். அங்கு தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்காக சரோஜாதேவி அவர்களும் அவருடைய தாயாரும் சென்று இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா?
Saroja devi

சம்பளம் கேட்டபோது சரோஜா தேவி தாயார் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாம். அது மிகப்பெரிய தகராறாக முற்றி சரோஜா தேவி அவர்களுடைய தாயார் தயாரிப்பாளரை நோக்கி மண்ணை வாரி இறைத்து நீ நன்றாக இருக்க மாட்டாய் என சபித்து விட்டார்.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com