விஜய்க்கு 3 லட்சம் சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்… என்னங்க இது?

Vijay
Vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ. தற்போது பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர், ஒரு திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து கேட்டால், அசந்தே போவீர்கள்.

பல வருடங்களாக பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதைக் கொள்ளைக் கொண்டிருப்பவர் விஜய். இவர் அரசியலில் நுழையும் காரணத்தினால், கடைசியாக ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு திரை வாழ்க்கையை முடித்துக்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.  தற்போது இவர் The Goat படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் அவருடைய கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் பரவிவருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

விஜய் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஷ்ணு. இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது, "விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்தபோது, அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சாரிடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டோம். அவர் நீங்கள் என்ன கொடுத்தாலும் ஓகே என கூறிவிட்டார். நாங்கள் இப்படத்திற்காக விஜய்க்கு ரூ. 3 லட்சம் சம்பளமாக கொடுத்தோம்." என கூறினார். 

இதையும் படியுங்கள்:
ஒளவையாரிடம் 'ஞான இட்லி' பெற்றாராம் கமல்!
Vijay

இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி, மக்கள் மனதில் நுழைந்து, அரசியலிலும் நுழைபவர் விஜய். இவரும் ஒரு காலத்தில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு தன் திறமையான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதைப் பிடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க இதுபோன்ற பல விஷயங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தளபதி விஜய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com