தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தனது அடுத்த படமான "AK 64" குறித்து சமீபகாலமாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. "குட் பேட் அக்லி" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அதே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைகிறார் அஜித். இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அஜித்தின் சம்பளம் குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தை அதிரவைத்துள்ளன. அது உண்மையா வதந்தியா என்பது குறித்துப் பார்ப்போம்...
முதலில், "AK 64" படத்திற்காக அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், சில நிறுவனங்கள் படத்திலிருந்து பின்வாங்கியதாகவும் கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றதில்லை என்றும், இது ஒரு புதிய சாதனையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன.
அந்தவகையில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு, அஜித் சம்பளமாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என கூறப்பட்டது. மாறாக, படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை முழுமையாக அஜித்துக்கே வழங்குமாறு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
இந்த ஒப்பந்தத்தின்படி, படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ராகுல் வைத்துக் கொள்வார். படத்தின் OTT, டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை விற்பனை செய்வதன் மூலம் வரும் வருவாயே அஜித்தின் சம்பளமாக கருதப்படும். இது தமிழ் திரையுலகில் ஒரு புதிய மற்றும் புரட்சிகரமான சம்பள பரிமாற்ற முறையாக பார்க்கப்படுகிறது என்றெல்லாம் கூறப்பட்டது.
மேலும், இதன் மூலம் தயாரிப்பாளர் தனது முதலீட்டை திரையரங்க வெளியீட்டின் மூலம் லாபம் ஈட்டலாம் என்றும், அஜித்துக்கும் படத்தின் வியாபாரத்தில் நேரடியாக பங்களிப்பு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. இந்த புதிய ஒப்பந்த முறை, பிற முன்னணி நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இது முற்றிலும் வதந்தி என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. Ak64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே இதுபோன்ற தகவல்களை உறுதிசெய்ய முடியும்.