லியோ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இணையத்தில் சர்ச்சை!

லியோ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இணையத்தில் சர்ச்சை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

லியோ படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்த நாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றிரவு 12 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இணையத்தில் பரவிவருகிறது. இதிலும் விஜய் சிகரெட் பிடிப்பது போல் போஸ்டர் தான் வெளியாகியது. இதுவும் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் இணைய உலகிலும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. லியோ படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com