சிரிப்பின் பின்னே மறைந்திருக்கும் கண்ணீர்... ஜிம் கேரியின் உண்மைக் கதை!

Jim Carrey
Jim Carrey
Published on

ன்று ஜிம் கேரி என்று சொன்னால் அவரைப் பற்றி தெரியாத நபர்கள் இருக்க முடியாது. முக்கியமாக 90 ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான காமெடி ஹீரோ என்றே சொல்லலாம். மாஸ்க் போன்ற பல தனித்துவமான கேரக்டரில் நடித்து நம் மனதில் அழியாத இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மிகவும் வலி மிகுந்ததாகும். அதை எல்லாம் தாண்டி தான் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார் ஜிம் கேரி. 

ஜிம் கேரி என்றாலே அவர் நடித்த பலவிதமான காமெடி கேரக்டர்ஸ் நம் கண்முன்னே ஓடும். ஜிம் கேரியின் இன்றைக்கு இருக்கும் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலரை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. கனடாவில் ஜனவரி 17, 1962 ஆம் வருடம் பிறந்தவர் தான் James eugene carry சுருக்கமாக Jim carrey. அம்மா கேத்தலின், அப்பா பெர்சி கேரி. மூன்று குழந்தைகளுக்கு பிறகு நான்காவதாக ஜிம் கேரி பிறந்தார். 

ஜிம் கேரிக்கு சிறுவயதில் இருந்தே நகைச்சுவை மீது ஆர்வம் வர ஆரம்பிக்கிறது. இதனால் எந்நேரமும் கண்ணாடி முன்பு நின்று பல முகபாவனைகளை செய்து ரசிப்பான். உடல்நிலை சரியில்லாத தன் அம்மாவை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜிம் கேரி நகைச்சுவையை தேர்ந்தெடுத்து அதை நோக்கி சென்றான். ஜிம் கேரிக்கு ஒன்பது வயது இருக்கும் போது அவருடைய தந்தைக்கு வேலை போகிறது. இதனால் மொத்த குடும்பமும் தங்குவதற்கு வீடு இல்லாமல் வீதிக்கு வந்தனர்.

இதனால் கைவிடப்பட்ட வேன், சின்னதாக தெருவோரம் டென்ட் போட்டு தங்கியிருக்கிறார்கள். இந்தசமயத்தில் தான் பெர்சி கேரிக்கு ஒரு இரும்பு ஆலையில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு தான் அந்த குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி மாற ஆரம்பித்தது. ஜிம் கேரியின் நகைச்சுவை உணர்வை பார்த்த அவருடைய தந்தை அதை வளர்ப்பதற்காக கனடாவில் உள்ள ஒவ்வொரு காமெடி கிளப்பிற்கும் அவரை கூட்டி செல்கிறார்.

You cube என்ற காமெடி கிளப்பில் முதல் முறையாக ஜிம் கேரியை மேடை ஏற்றினார் அவருடைய தந்தை. ஆனால், அது தோல்வியில் முடியவே, 'இனி மேடை ஏற மாட்டேன்' என்று சொல்லி ஜிம் கேரி மனம் உடைந்து போகிறார். பிறகு அப்பா வேலை செய்யும் ஆலையில் வேலைக்கு சேர்ந்து உழைக்கிறார். இதற்கு நடுவிலே Stand-up Comedy செய்ய தொடங்குகிறார். அது நல்ல வரவேற்பை பெறுகிறது. அதற்கு பிறகு ஹாலிவுட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு லாஸ் ஏஞ்சல்ஸ் வருகிறார். ஆனால் அவருக்கு அங்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் ஜிம் கேரி டெலிவிஷனில் கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க தொடங்குகிறார். அதற்கு பிறகு தான் சினிமாவில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைக்க தொடங்குகிறது. இவர் முதல் முதலில் Peggy sue got married என்ற படத்தில் நிக்கோலஸ் கேஜ்ஜூடன் சேர்ந்து நடிக்கிறார். அதில் இவருக்கு நல்ல வறவேற்பு கிடைக்கிறது. பிறகு 1994 ல் Ace ventura என்ற படத்தில் நடித்தார். இது மிகபெரிய வெற்றியடைந்தது. இதனால் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் அதிகரித்தார்கள். Dump and dumper படத்தில் இவருடைய சம்பளம் 7.5 மில்லியன் டாலராக இருந்தது.

இதையும் படியுங்கள்:
குவியும் வாழ்த்துக்கள்..! மீண்டும் உலக சாதனை படைத்த நடிகர் புகழின் மகள்..!
Jim Carrey

ஜிம் கேரி மக்களை எப்போதுமே சிரிக்க வைப்பதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டினார். ஜிம் கேரியின் படங்கள் பலரை சிரிக்க வைத்தது மட்டுமில்லாமல் சிந்திக்கவும் வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய வளர்ச்சி சாதிக்க வேண்டும் என்று நினப்பவர்களுக்கு ஒரு பாடமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com