

உலக அளவில் அதிக சம்பளம் பெறுபவர்களில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் சில படங்களில் வாங்கும் சம்பளத்தை விட, தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளம் அதிகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆனால், இது உண்மை தான். அதனால் தான் உலகின் பணக்கார நடிகர்களில் அதிகம் பேர் இந்தியாவை சேர்ந்த நடிகர்களாக உள்ளனர். இவர்களின் சம்பளம் படத்தின் வெற்றி தோல்வி, பட்ஜெட் ஆகியவற்றை பின்பற்றி மாறுபடாது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதிக அளவில் தமிழ் நடிகர்கள் சம்பாதிக்கின்றனர்.
1. ரஜினிகாந்த்
சம்பளத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த சொத்து மதிப்பிலும் நம்பர் 1 ஆக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் 200 - 250 கோடி வரை உள்ளது என்று தகவல்கள் உள்ளன. 50 வருடங்களாக தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறக்கும் ரஜினிகாந்த் இருக்கு ஏராளமான சொத்துக்கள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் உள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு ₹1800 கோடி வரை இருக்கலாம்.
2. விஜய்
ரஜினிக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக நடிகர் விஜய் உள்ளார். ஆயினும் மெர்சல் திரைப்படத்திற்கு பின்னர் தான் விஜயின் சம்பளம் 100 கோடியை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் பின்னர் விஜய் ஒரு சில படங்களே நடித்துள்ளார். முன்னர் அதிக படங்களில் அவர் சம்பாதித்தவை எல்லாம் பல்வேறு இடங்களில் முதலீடு செய்து அதன் மூலம் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளார். ரோல்ஸ்ராய்ஸ், சொகுசு பஸ், சொகுசு பங்களா என ஆடம்பரமாக வாழும் இவரது சொத்து மதிப்பு ₹1500 கோடியை தாண்டும் என்கின்றனர்.
3.சூர்யா
ஒரு கட்டத்தில் விஜயை விட அதிக சம்பளம் வாங்கியவர் நடிகர் சூர்யா , சம்பளம் மட்டுமல்ல , குறிப்பிட்ட ஏரியாக்களின் திரைப்பட விநியோக உரிமையையும் அவர் பெற்று , மிக அதிக அளவில் சம்பாதித்து இருந்தார். இது மட்டுமல்லாது பல தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார். சமீப கால சறுக்கல்கள் இல்லாவிட்டால் சூர்யாவின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கும். தற்போது சூர்யாவின் சொத்து மதிப்பு ₹630 கோடி அளவில் உள்ளது.
4. அஜித்
நடிகர் அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் அதை பெரிய அளவில் எதிலும் முதலீடு செய்வதில்லை. சென்னை மற்றும் துபாயில் அவருக்கு ஆடம்பர வீடுகள் உள்ளன , அவரிடம் அதிக அளவில் விலையுயர்ந்த ரேஸ் கார்கள் மற்றும் ரேஸ் பைக்குகள் உள்ளன. அஜித்தின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிருக்கும்.
5. கமல் ஹாசன்
கமலஹாசன் ஒரு காலத்தில் ரஜினிகாந்த்திற்கு இணையாக சம்பளம் வாங்கியவர். சினிமாவில் ஏராளமாக அவர் சம்பாதித்து இருந்தாலும் அந்த பணத்தை எல்லாம், சில திரைப்படங்களை எடுத்து நஷ்டத்தினையும் சந்தித்துள்ளார். அதனால் கமலின் சொத்து மதிப்பு சற்று குறைவாக இருக்கும். விக்ரம் படத்திற்கு பின்னர் கமலின் சம்பளம் உயர்ந்துள்ளது. தற்போது அவரின் சொத்து மதிப்பு 450 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம்.
6. பிரபு
சிவாஜியின் மகனான பிரபு ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக அதிக விளம்பரப் படங்களில் நடிக்கும் தமிழ் நடிகராகவும் இருக்கிறார். பிரபுவின் சொத்து மதிப்பு 400 - 500 கோடி வரைக்கும் இருக்கலாம் என்று தகவல்கள் உள்ளது.
7. தனுஷ்
தமிழ் , ஹிந்தி , இங்கிலீஷ் என்று தொடர்ச்சியாக நடித்து வரும் தனுஷ் 50 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் , திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். போயஸ் கார்டனில் இவர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு 50 கோடிக்கும் அதிகம். இவரது சொத்து மதிப்பு 350 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
8. சிவ கார்த்திகேயன்
அடுத்த விஜய்யாக கருதப்படும் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 100 கோடி வரை உயர்த்தி உள்ளதாக மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இவரது சொத்து மதிப்பு 250 கோடி ஆக உள்ளது.
9. பிரபு தேவா
நடிகர், நடன கலைஞர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா ஒரு காலத்தில் ரஜினிக்கு போட்டியாக அதிக சம்பளம் பெற்றவர். இன்று பிரபு தேவாவின் சொத்து மதிப்பு 170 கோடி ஆக உள்ளது.
10. விக்ரம்
நீண்ட காலமாக சினிமாவின் நடித்து வரும் விக்ரம் 40 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அவரது சொத்து 150 கோடியாக உள்ளது.