பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரைலர் வெளியானது!

The Goat Life movie
The Goat Life movie
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

வெகுக்காலமாகவே ப்ரித்விராஜின் படங்கள் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. அப்படி வரவேற்பைப் பெற்றாலும் அது மலையாள சினிமாவுடனே நின்றுவிடுகிறது. அதனை உடைத்தெரியும் விதமாக பிரித்வி தனது திறமை மிகுந்த நடிப்பால் சலார் படத்தின் மூலம் மீண்டும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் பிரபாஸுக்கு ஈடுக் கொடுத்து நடித்து, அந்தக் கதாப்பாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார் பிரித்வி. அந்தவகையில் பிரித்வியின் அடுத்தப் படமான The Goat Life படத்தின் அறிவிப்பு வெளியான முதலே இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது.

அதற்குக் காரணங்களும் உள்ளன. பிரித்விராஜ் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமானத் தோற்றத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் 2008ம் ஆண்டு மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் கதையின் உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் உருவாகிவுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி ஆவார். இவர் 2004ம் ஆண்டு காழ்ச்சா என்றப் படத்தை இயக்கி மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஒன்பது படங்களை இயக்கினார். அதில் 2005ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான தன்மந்த்ரா படம் தேசிய விருதை வாங்கியது. இது அவரின் இரண்டாவது படமாகும். இதுவரைப் பல விருதுகளை வாங்கிய இவர் தற்போது உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஆடு ஜீவிதம் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வினித் ஸ்ரீனிவாசன், சந்தோஷ் கீழட்டூர், ஜிம்மி ஜீன்-லூய்ஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆடு ஜீவிதம் படத்தை இயக்குனர் ப்ளஸ்ஸி உட்பட ஸ்டீவன் ஆடம்ஸ், ஜிம்மி ஜீன்ஸ் – லூயிஸ் ஆகியோர் இணைந்துத் தயாரித்துள்ளனர். ஆடு ஜீவிதம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள்:
ராமன் வேண்டாம், ராவணன் கதாப்பாத்திரம்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் தென்னிந்திய நடிகர்!
The Goat Life movie

அந்தவகையில்  இப்படத்தின் ட்ரைலர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  

logo
Kalki Online
kalkionline.com