இந்த நடிகர்கள் எல்சியுவிற்கு வேண்டாம்! – லோகேஷின் அதிரடி முடிவு!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் எல்.சி.யு என்ற கான்செப்ட்டில் கொண்டு வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து லோகேஷ் பேசும்போது எல்.சி.யுவில் இந்த நடிகர்களை நடிக்கவிடமாட்டேன் என்று திட்டவட்டமாக பேசியிருக்கிறார்.
லோகேஷ் இயக்கிய மாநகரம் திரைப்படம் 2017ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி வெளியானது. அதற்கு முன்னர் 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி 'அவியல்' என்றப் படத்தின் மூலமே சினிமா துறையில் கால்பதித்தார். அவியல் படம் நான்கு குறும்படங்கள் சேர்ந்த படமாகும். அந்த நான்கு குறும்படங்களை ஆல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் மேஹ்ரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இயக்கினார்கள்.
இதனையடுத்துதான் அடுத்த ஆண்டு 'மாநகரம்' படம் வெளியானது. 2019ம் ஆண்டு கைதி படத்தை கார்த்தி வைத்து ஒருநாள் இரவில் நடக்கும் கதையாக எடுத்தார்.
இப்படம்தான் திரைத்துறையில் லோகேஷின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக 2021ம் ஆண்டு லோகேஷ் விஜய் வைத்து 'மாஸ்டர்' படம் இயக்கினார். இது வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது. அதன்பின்னர் லோகேஷ் கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜயின் லியோ படங்களை இயக்கினார்.
இயக்குனராக வெற்றிபெற்ற லோகேஷ் 2022ம், ஆண்டு மைக்கல் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கினார். அதன்பின்னர் அர்.ஜே.பாலஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோல் செய்து நடிப்பிலும் களமிறங்கினார்.
இவரது படங்கள் அனைத்தும் ஒரு பிரம்மாண்டமான சினிமாட்டிக் யுனிவர்ஸ், அதாவது எல்.சி.யு (Lokesh Cinematic Universe) என்றழைக்கப்படும் ஒரு பொதுவான கதைக்களத்திற்குள் இணைக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது. ஆனால், இந்த எல்.சி.யுவில் சில நடிகர்களுக்கு மட்டும் இடம் கிடைக்காது என லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த செய்தி, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது பேட்டியில் , "எல்.சி.யு-வில் ஒரு படம் உருவாகும்போது, ஏற்கெனவே யுனிவர்ஸில் இடம் பெற்ற சின்னஞ்சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.
இறந்துபோன கதாபாத்திரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க வேண்டும். ஏன், எல்.சி.யு-வில் முன்பு ஒரு படத்தில் நடனக் கலைஞராகவோ அல்லது சண்டைக்காட்சியில் பங்கேற்றவராகவோ இருந்தவர்கள், புதிய படங்களில் வேறு கதாபாத்திரங்களில் வராமல் பார்த்துக்கொள்வதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்." என்று விளக்கமளித்துள்ளார்.
இதன்மூலம் அவர் தனது படங்களை மிக கவனத்துடன் நகர்த்த திட்டமிடுவது நன்றாக தெரிகிறது.