டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் வெளியீடு... யாருக்கு எந்த இடம்!

Actors
Actors

இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்திய சினிமாவில், ஏராளமான நடிகர்கள் தற்போது கோடி கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர். அவ்வபோது நடிகர்களின் சொத்து மதிப்பு விவரம், சம்பள விவரம் வெளியாகும். அந்த வகையில், புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

ஷாருக்கான்:

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஷாருக்கான் தான். ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், இவருக்கு ரூ.6,300 கோடி சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சல்மான் கான்:

தொடர்ந்து 2ஆம் இடத்தில் சல்மான் கானும், இவரது சொத்து ரூ.2,900 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார்:

3வது இடத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் இருப்பதாகவும், அவரது சொத்து மதிப்பு ரூ.2,500 கோடிக்கு மேல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அமீர் கான்:

டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை நடிகர் ஆமீர் கான் பெற்றிருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், இவருக்கு 1,862 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறதாம்.

விஜய்:

5ஆம் இடத்தில் தமிழ் நடிகரான விஜய் இடம்பெற்றுள்ளார். தமிழ் சினியுலகில் முதலிடத்திலும், இந்திய அளவில் 5ஆம் இடத்திலும் உள்ளார். தற்போது அரசியலிலும் நுழைந்திருக்கும் விஜய், சினிமாவை விட்டு விலகவும் உள்ளார். இவருக்கு ரூ.474 கோடி சொத்துக்கள் உள்ளன.

ரஜினிகாந்த்:

நடிகர் விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தான் 6ஆம் இடத்தில் உள்ளார். ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சித் ஸ்ரீராம் ரசிகர்களுக்கு குட்நியூஸ்... சென்னையில் மாஸ் கான்செர்ட்... எப்போது தெரியுமா?
Actors

அல்லு அர்ஜுன்:

டோலிவுட்டின் டிரெண்டிங் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன், ரூ.350 கோடி சொத்து மதிப்புடன் 7ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

பிரபாஸ்:

8ஆம் இடத்தில் பிரபாஸ் இடம்பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.241 கோடி ஆகவுள்ளது.

அஜித்:

டாப் 10 இடத்தில் நடிகர் அஜித்குமார் 9ஆம் இடத்தை பிடித்துள்ளார். தமிழி சினிமாவை பொறுத்தவரை 3ஆம் இடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.196 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன்:

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் நடிகர் கமல்ஹாசன் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இருக்குமாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com