திரு.மணிக்கமாக சமுத்திரக்கனி.. மீண்டும் திரையில் ஹீரோவாக!

திரு.மணிக்கமாக சமுத்திரக்கனி.. மீண்டும் திரையில் ஹீரோவாக!

டிகர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு திரு. மாணிக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் சமுத்திரக்கனி படம் என்றாலே நல்ல கருத்துக்கள் நிரம்பி வழியும். இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக திரு. மாணிக்கம் என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கதை குறித்து இயக்குனர் நந்தா பெரியசாமி தெரிவித்து இருப்பது. மாணிக்கம் என்ற ஒரு மனிதர் எப்படி திரு.மாணிக்கமாக மாறுகிறார். ஒரு மனிதன் எந்த அளவிற்கு நேர்மையாக இருக்க முடியும். இந்த காலத்தில் நேர்மைக்கான மனிதர்கள் வாழ்கிறார்களா ? இல்லையா ? என்பதை பற்றிய கதை தான் இந்த கதை.

அதே சமயம் மாணிக்கத்தின் குடும்பம், நட்பு, காவல்துறையினர் என்று சுற்றி உள்ளவர்கள் அனைவரும் இணைந்து மாணிக்கத்தின் நேர்மையை சிதைக்க எடுக்கும் முயற்சி. அதை மாணிக்கம் அணுகும் முறை, ஆகியவையே இந்த திரைப்படம். இது ஒரு நேர்மையின் அடையாளம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தை ரவிக்குமார், சித்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். திரு. மாணிக்கம் படத்தை நந்தா பெரியசாமி இயக்குகிறார். மேலும் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமான், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com