தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் நம்புகின்றனர்.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே தனது முக்கிய நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் நுழைவு, தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இளைஞர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில அரசியல் விமர்சகர்கள், விஜய்யின் அரசியல் நுழைவு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், இன்னும் சிலர், அரசியல் அனுபவம் இல்லாத விஜய், அரசியல் களத்தில் வெற்றி பெறுவது கடினம் என்று விமர்சிக்கின்றனர்.
சினிமாவில் மட்டும் இருக்கும்போதே ஒருவருக்கு சமூகத்தில் நிம்மதியாக சுற்றுவதற்கு கடினமாக இருக்கும், அரசியலிலும் இறங்கிவிட்டால் சொல்லவா வேண்டும்.
நடிகர் விஜய் ஒரு பழைய பேட்டியில் நடிகராக சமூகத்தில் வலம் வருவது எப்படிப்பட்ட தொல்லை என்று பேசியிருந்தார்... அதுகுறித்து பார்ப்போமா?
அந்த நேர்காணலில், தொகுப்பாளர் விஜயிடம் கேட்டது,”இப்ப ஒரு நடிகர் ஆன பிறகு உங்களுக்கு பணம், புகழ், நடிகர் எங்கின்ற தகுதி, மக்கள் துணை – இது எல்லாமே கிடைச்சுருக்கு, இது உங்களோட தனிப்பட்ட வாழ்க்கைய பாதிக்குதா? இதுல எதாவது தொல்லையா இருக்குதா?” என்று கேட்டார்.
அப்போது விஜய் பதிலளித்தது, “நான் அதலாம் தொல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி நண்பர்களுடன் ஃப்ரீயா வெளியே போறது, டீ கடைக்கு போறது, தியேட்டர் போய் படம் பாக்குறது, ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ ரஜினி சார் படம் போறது, கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டு, இதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்.
பப்ளிக்கோட மூவ் பண்றது, Society ஓட mingle பண்றது, இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயங்கள். இதெல்லாம்தான் நான் ரொம்ப மிஸ் பண்றேன். But அதுக்கூட தொல்லைன்னு சொல்ல முடியாது. அழகான தொல்லைன்னு சொல்லலாம்.” என்று பேசினார்.
தொல்லை இல்லையாம், அழகான தொல்லையாம். அதனால்தான் ரசிகர்களும் அழகான தொல்லையை ஆழமாக கொடுக்கிறார்கள் போல…..!!!