நதியா சினிமாவைவிட்டு விலக இந்த பிரபல ரௌடிதான் காரணம்!
80ஸ் ஹீரோயினாக வலம் வந்த நதியா, தற்போது தமிழ் படங்களில் நடிப்பதில்லை. நதியா தமிழ் சினிமாவிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பல நடிகைகள் தங்களுக்கு நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதற்கு நடிகர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இனி திரைத்துறையில் இருப்பவர்கள் பாலியல் வழக்கில் சிக்கினால், ஐந்து ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றக்கூடாது என்ற சட்டம் வந்துள்ளது.
இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களின் நாயகியாக வலம் வந்த நதியா, சமீபக்காலமாக அவ்வளவாக படங்கள் நடிப்பதில்லை.
தெலுங்கு படங்களில் அவ்வப்போது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கில்தான். தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை. அந்தவகையில் இவருக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான செய்தி குறித்தே தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கிறார்.
“ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பல நடிகைகள் அதில் புகார் அளிப்பார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாது. புகாரை வாங்கி மட்டும் வைத்துக்கொள்ளும். ஹேமா கமிட்டிக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை. அது ஒரு பல்லு இல்லாத ஆணையம் .
நடிகை நதியாவிற்கு தொடர்ந்து வீரமணி தொல்லை கொடுத்துவந்தார். இதுபற்றி சினிமாலயா எடிட்டர் எம்.ஜி.வள்ளவனிடம், நதியா புலம்பி இருக்கிறார். இதற்கு அவர் கொடுத்த ஐடியா இனிமேல் இங்கு இருக்காதே வெளிநாடு சென்றுவிடு என்று சொன்னார். நதியா தமிழ் சினிமாவைவிட்டு விலக காரணமே, அயோத்தி குப்பம் வீரமணி தான். அவரின் கட்டுப்பாட்டிற்குள் நதியாவை இருக்க சொன்னார். அதற்கு மறுப்புத் தெரிவிப்பதுபோல், இங்கிருந்தே சென்றுவிட்டார்.” என்று பேசினார்.
சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் வந்தால், வெளிப்படையாக கூறி எதிர்க்கலாம். ஆனால், ரௌடிகளிடமிருந்தெல்லாம் தொல்லை வந்தால், ஒரு நடிகை என்ன செய்வது? படத்தில் போராடுவது போல் நடிப்பது எளிது… ஆனால், நிஜத்தில் உண்மையாகப் போராடுவது…?