7 பாடல்களிலிருந்து உருவான கதைதான் இந்தப்படம் – மோகன்!

Mohan
Mohan

1983ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான ஒரு படம், 7 பாடல்களிலிருந்து உருவானது என்று கூறினால், நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், நடிகர் மோகனே இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் 80s களில் சினிமாவில் தனி ராஜ்யத்தை உருவாக்கி ஆட்சிப் புரிந்தவர், மோகன். இவர் நடிப்பும் இளையராஜாவின் பாடலும் சேர்ந்தால் அது ஒரு தனி வைப்தான். ரஜினி, கமல் போல் அப்போது அவரும் சினிமாவில் சிறந்து விளங்கினார். ஆனால், நாளடைவில் சிறந்த படங்கள் வராததால் அவர் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகினார்.

அந்தவகையில், நீண்ட காலத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் The Goat படத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து தற்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வந்தன.

‘மௌன ராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘உதய கீதம்’, ‘பாடு நிலாவே’ போன்ற படங்களில் நடித்த 80s ஹீரோ, தற்போது வில்லனாக மாறிய செய்தி பலரையும் எதிர்பார்ப்பு வளையத்திற்குள் தள்ளியுள்ளது. மோகனின் இந்த கம்பேக் மிகவும் ஸ்டார்ங்காக இருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில், தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கம்மிட்டாகும் இவர், மீண்டும் சினிமாவில் ஸ்டார்ங்காக வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், இவர் பல வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்ததால், தொடர்ந்து பல தனியார் சேனல்களுக்கும், யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தவகையில், தற்போது ஒரு பேட்டியில் சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

1983ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான இளமை காலங்கள் படம் குறித்துதான் அவர் பேசியிருக்கிறார்.

அதாவது அந்த படத்தின் தலைப்பும் ஒரு கதையும் வைத்து, ஒரு இயக்குனர் ஏற்கனவே ஒரு படம் எடுத்திருந்தார். ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. அப்போது அந்தப் படத்திற்காக இளையராஜா இசையமைத்த 7 பாடல்கள் அப்படியே இருந்தன.

இதையும் படியுங்கள்:
கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி கட்டிய கைகடிகாரங்களுக்கு பின்னால் இப்படி ஒரு அர்த்தமா? அவரே சொன்ன தகவல்!
Mohan

அப்போது இந்த 7 பாடல்கள் வைத்து ஒரு கதையை உருவாக்க சொல்லி இயக்குனர் மணிவண்ணனிடம் பேசப்பட்டது. பின்னர்தான் அதே தலைப்பான இளமை காலங்கள் மற்றும் பாடல்கள் வைத்து வேறு ஒரு கதையில் படம் 1983ம் ஆண்டு வெளியானது.

இப்படிதான் இளமை காலங்கள் படம் உருவானது என்று மோகன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com