கோடி கணக்கில் பங்களா இருந்தும் அமீர்கானின் சின்ன ஆசை இதுதான்!

Aamir Khan
Aamir Khan

சினிமாவை விட்டு விலகிவிட்டு குன்னூரில் செட்டிலாவது தான் ஆசை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் கன்னியமான திரைக்கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் ஸ்டார் அமீர் கான். 1965ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த திரையுலக பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பின்னாளில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞனாக திகழ்வதற்கு அவரின் குடும்ப பின்னணி பெரும் உதவியாக இருந்தது. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தை நாடகங்கள் மூலம் மெருகேற்றி கொண்டார். அங்கே தான் அவரின் நடிப்பு பயணம் துவங்கியது.

லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்த அமீர்கான் அதன்பின் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இதனிடையே அண்மையில் அவரது மகள் ஐராகானின் திருமணமும் நடைபெற்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

நடிகர் அமீர்கான் கடந்த சில மாதங்களாக சென்னையில் தான் வசித்து வந்தார். அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்ததால் அவருக்காக சென்னையில் குடியேறினார் அமீர்கான். இவருக்கு சொந்தமான மும்பையில் ஒரு சொகுசு பங்களா இருக்கும் போதும், இவரின் ஆசை குன்னூரில் செட்டில் ஆவது தான் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
‘குட் பேட் அக்லி’ படத்தின் வில்லன் இவர்தானா? அஜித்துடன் இணையும் 24 ஆண்டுக்கால நண்பர்!
Aamir Khan

கடந்த 1994ஆம் ஆண்டு இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்னுடைய மனைவி ரீனா தத்தா மிகவும் சந்தோஷப்படுவார். குடும்பத்தினருடன் குன்னூருக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குவேன் என கூறியுள்ளார். மேலும் அது வாழ்ந்த சிறந்த இடம் என கூறி உள்ள அமீர், தான் அங்கு சொந்தமாக வீடுவாங்குவது பற்றியும் யோசித்து வருகிறேன். அது என் நீண்டநாள் கனவு என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com