தென்னிந்திய திரைப்படங்களை ஷாருக்கான் ரசிப்பதற்கு காரணம் இதுதான்!

Sharukh Khan
Sharukh Khan
Published on

பாலிவுட்டில் கலக்கி வரும் ஷாருக்கான் லோகார்னோ திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது தென்னிந்திய சினிமாவை தான் ரசிப்பதற்கான காரணத்தை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

இந்தியத் திரைப்படங்களில் முன்பெல்லாம் பாலிவுட் படங்கள் தான் நல்ல வசூலைப் பெற்று வந்தன. ஆனால், தற்போது தென்னிந்தியப் படங்களும் பாலிவுட்டுக்கு இணையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸை அதிரச் செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் எந்தப் படமும் பெருவெற்றியைப் பெறாத நிலையில், கடந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டின. இந்த வெற்றியின் மூலம் பாலிவுட் தலைநிமிரத் தொடங்கியது.

கடந்த மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் கிரவீன் மியூசியம், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு தங்க நாணயம் வெளியிட்டு சிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஷாருக்கானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்நாளில் பாலிவுட் சினிமாவை தனது சிறந்த நடிப்பால் தலைநிமரச் செய்த ஷாருக்கானின் செயலைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான், ரெட் சில்லிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சில தோல்விப் படங்களை இவர் கொடுத்திருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களைத் தந்திருக்கிறார் ஷாருக்கான்.

சுவிட்சர்லாந்து நாட்டில் 77வது லோகார்னோ திரைப்பட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற ஷாருக்கானின் 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஷாருக்கானிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது தென்னிந்திய சினிமாவிற்குள், பாலிவுட்டிற்கும் இடையே இருக்கும் சில நேர்மறையான கருத்துகளை அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
என் வாழ்வை மீட்டெடுத்தவர் இந்த பாலிவுட் நடிகர் தான்: ஜான் சீனா!
Sharukh Khan

மேலும் தென்னிந்திய சினிமா பற்றிய ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் விடையளித்த விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “தொழில்நுட்ப ரீதியாக தென்னிந்திய சினிமாக்கள் மிகவும் அற்புதமானவை. பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் ஜவான் உள்ளிட்டத் திரைப்படங்கள் உலகில் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. தென்னிந்தியப் படங்களில் ஒரு குறிப்பட்ட பாணி இருக்கிறது. அதை நான் மிகவும் ரசிக்கிறேன். இது முற்றிலும் எனக்கு புதிய அனுபவமாகத் தெரிகிறது,” என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் நேரடி தென்னிந்திய படங்கள். இந்த வரிசையில் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ள ஜவான் திரைப்படம் நேரடி பாலிவுட் படமாக இருந்தாலும், இதன் இயக்குநர் மற்றும் இதில் நடித்த சில முக்கிய நடிகர், நடிகைகள் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் இயக்குநர்களைத் தவிர்த்து விட்டு, தென்னிந்திய இயக்குநர் அட்லியை இவர் தேர்வு செய்தது, அப்போதைய காலகட்டத்தில் பேசுபொருளானது. ஆனால், அனைவரையும் வாயடைக்கும் படியாக ரூ.1,000 கோடி வசூலை ஈட்டி சாதனைப் படைத்தது ஜவான் படம். இதனாலேயே தென்னிந்திய சினிமாக்களை அதிகமாக ரசிக்கிறார் ஷாருக்கான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com