என் வாழ்வை மீட்டெடுத்தவர் இந்த பாலிவுட் நடிகர் தான்: ஜான் சீனா!

John Cena
John Cena
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற மல்யுத்த வீரராகத் திகழ்பவர் ஜான் சீனா. என் வாழ்க்கையை மாற்றியது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வார்த்தைகள் தான் என சமீபத்தில் ஜான் சீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

WWE எனப்படும் உலக அளவில் பிரசித்தி பெற்ற மல்யுத்தப் போட்டியில் புகழ்பெற்ற வீரராக இருப்பவர் ஜான் சீனா. இவருக்கென்று உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஜான் சீனா ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். எப்பேற்பட்ட வெற்றியாளனுக்கும் கடினமான சூழ்நிலை என்பது வருவது இயல்பு தான். அப்படிப்பட்ட சூழலை ஜான் சீனாவும் சந்தித்துள்ளார். அந்த சமயங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் மன அழுத்தத்தில் இருந்தவரை ஷாருக்கானின் வார்த்தைகள் தான் தேற்றியுள்ளது.

தனது வாழ்வை மாற்றியது குறித்து ஜான் சீனா கூறுகையில், “ஷாருக்கானின் TED TALKS என்ற உரை எனது வாழ்வையை மாற்றியமைத்தது. கடினமான சூழ்நிலையை எதிர்த்திட ஷாருக்கானின் வார்த்தைகள் எனக்கு ஊன்று கோலாக இருந்தன. இந்த உரையைக் கேட்ட பின்பு தான், எனக்குள் இருக்கும் நேர்மறையான திறமைகளைக் கண்டறிந்தேன். அதற்கு பிறகு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி, மிகவும் கடுமையாக உழைத்து வருகிறேன். நம் வாழ்வை வசந்தமாக மாற்றிய ஒருவருடன் கைகுலுக்குவது என்பது வாழ்வில் மிகச் சிறந்த தருணம். அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு சென்று நான் வெளியேறும் போது தான் ஷாருக்கானைச் சந்தித்தேன். தாராள மணம் கொண்ட நல்ல மனிதர். ஒரு மிகச் சிறந்த பயணித்தின் அற்புதமான முடிவாக எங்கள் சந்திப்பு இருந்தது.” என்று கூறினார்.

Sharukh Khan - John Cena
Sharukh Khan - John Cena
இதையும் படியுங்கள்:
பாலிவுட் பாட்ஷாவை பெருமைப்படுத்திய பாரீஸ் மியூசியம்!
John Cena

WWE இல் இவரது வருகையின் போது ஒலிக்கும் அதிரடியான இசை, அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்திருக்கும். மல்யுத்த விளையாட்டில் புகழ்பெற்ற ஜான் சீனா, ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். மல்யுத்தத்தில் பல சாம்பியன் பட்டங்களைப் பெற்றவர், நடிப்பிலும் தனது திறமையை அபாரமாக வெளிப்பிடுத்தி வருகிறார். சில மல்யுத்த வீரர்கள் இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், ஜான் சீனாவும் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஒருவேளை இவர் இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்தால், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான், ஹாலிவுட் நடிகரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரண ஒன்றல்ல. தோல்வியின் விளிம்பில் இருக்கும் ஒருவருக்கு ஊக்கமளித்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆசானைப் போன்றது ஷாருக்கானின் வார்த்தைகள். பாலிவுட்டில் வசூல் மன்னராகத் திகழும் ஷாருக்கான், உலக அளவில் பிரபலமானவர் என்பதை எடுத்துரைக்கும் மற்றுமொரு நிகழ்வு தான் இது.

ஹாலிவுட் நடிகருக்கும், பாலிவுட் நடிகருக்கும் இப்படியான ஒரு நல்ல தொடர்பு இருப்பது கலைஞர்களின் ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க எடுத்துக்காட்டாய் அமைகிறது.

logo
Kalki Online
kalkionline.com