இதனால்தான் நான் அவருடன் நடிக்கவில்லை – ரகசியத்தை உடைத்த மீனா!

Meena and Aravindsaamy
Meena

தமிழ்த்திரையுலகில் 90ஸ் ஹீரோயினாக இருந்த மீனா ரஜினிகாந்த் முதல் பிரபல ஹீரோக்கள் வரை அனைவருடனும் நடித்துவிட்டார். ஆனால், அவர் ஒரு ஹீரோவுடன் நடிக்காதது குறித்தும், அவருடன் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

1982ம் ஆண்டு நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது மீனா குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதேபோல் இவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய்யின் தெறி படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார், அதன்பின் அரவிந்த் சாமியுடன் ஒரு படம் நடித்தார். பின் நடிப்பு இப்போதைக்கு வேண்டாம் படிப்பு முக்கியம் என முடிவு எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகை மீனா, அரவிந்த்சாமி குறித்து பேசியுள்ளார். அதாவது, “நான் எத்தனையோ நடிகர்களோடு நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அரவிந்த்சாமியுடன் தான், ஆனால் அவருடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை. அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டு கொண்டிருந்தேன்.

அப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது, ஆனால் எனக்கு கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை. என் மகள் பாஸ்கர் என்ற ராஸ்கல் படத்தில் அவருடன் நடித்துவிட்டார். அப்பட படப்பிடிப்பு செல்லும் போது நான் நடிக்க ஆசைப்பட்ட விஷயத்தை கூறினேன். கண்டிப்பாக நடக்கும் என அரவிந்த் சாமி கூறினார்."

இதையும் படியுங்கள்:
கெட்டவார்த்தைப் பேசிய நடிகை... துரத்தி துரத்தி அடிக்கப் போன நாகார்ஜுனா!
Meena and Aravindsaamy

அரவிந்த்சாமி அப்போதைய காதல் மன்னன் மற்றும் இப்போதைய வில்லன் மன்னன் என்றுக் கூறலாம். இவர் காதல் படங்களில் ஹீரோவாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுத்தார். இப்போது தனி ஒருவன் படத்தின் பாகம் 2ல் இவரது கதாபாத்திரத்திற்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com